-
மூப்பனாகிய நான்
சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:
-
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
-
சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய்
என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும்
சந்தோஷப்பட்டேன்.
-
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று
கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
-
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும்
செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.
-
அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச்
சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி
அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.
-
ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும்
வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.
-
ஆகையால் நாம் சத்தியத்திற்கு
உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள
கடனாளிகளாயிருக்கிறோம்.
-
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில்
மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை
ஏற்றுக்கொள்ளவில்லை.
-
ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு
விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை
நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான்
சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள
மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
-
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல்,
நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்;
தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
-
தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல்,
சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம்,
எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
-
எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால்
மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
-
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன்,
அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக.
சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக
வாழ்த்துவாயாக.;