Tamil Christian Songs

Download MP3 Song, News, Music, Audio and Video

Thursday
Sep 09th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home வாலிபர் பகுதி Travel Tips அண்ணே என்னைக் காப்பாத்துங்க

அண்ணே என்னைக் காப்பாத்துங்க

E-mail Print PDF
User Rating: / 28
PoorBest 

save meகடைசி காலத்தில் தேவன் எங்கும் எழுப்புதலை க் கொண்டு வர விரும்புகிறார்.  சாத்தானோ தனக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிவடையப் போகிறது என்பதை உணர்ந்தவனாய் எவ்வளவு முடியுமோ அவ்வளவாய் ஐனங்களை தன்னன்டையிலே இழுத்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சித்து  பாதாளத்துக்கு இழுத்துச் செல்ல விரும்புகிறான்.

 

 

                        பல நேரங்களில் வாலிப தம்பி தங்கைகள் இப்படியாய் புலம்புவதுண்டு “எப்படியாவது பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.  ஆலயத்தில் பிரசங்கம் கேட்கும் போது எப்படியும் பரிசுத்தமாய் வாழந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விடுகிறது.  ஆனால் உலகத்தில் வாழும்போது நண்பனைச் சந்திக்கும் போது பாவ சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் போது என் பரிசுத்தமெல்லாம் பஞ்சாய் பறந்து போய் விடுகிறது.  அடுத்த வார ஆராதனைக்கு  வரும்போது கை கால்கள் முறிக்கப்பட்ட முடவனைப்போல் வருகிறேன்.  முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல பரிசுத்தத்திற்கு ஆசைப்படுகிறேனோ என்றெண்ணி ஒரு ஓரத்தில் ஒதுங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் போதகர் என் சத்துருவே எனக்கு விரோதமாய் சந்தோஷப்படாதே, நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன், நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்“ என்று சொல்லி என் கையைப பிடித்து எழுந்து நட என்று சொல்லி என்னைத் தூக்கி விடுகிறார்.  நானும் சப்பாணி குணமாகி 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஓடுவது போல ஓடி வருகிறேன்.  ஆனால் கல்லூரியில் சென்றதும் என் கால்கள் மீண்டும் முடமாகின்றன.  இப்படிச் சபையில் துள்ளிக் குதிப்பதும் கல்லூரியில் அந்தர் பல்டி அடிப்பதும் என் அன்றாட வாழ்க்கையில் வாடிக்கையாகிவிட்டதால் நான் வேடிக்கையாய் மாறிவிட்டேனே என்றெண்ணி  வேதனைப்படும் அன்பு தம்பிகளே இப்படி சபையில் ஒரு ஓட்டமும், சமுதாயத்தில் ஒரு ஓட்டமும் இருப்பதால் நீ இரட்சிக்கப்படவில்லையென்று உன்னையே நொந்து கொள்ளாதே, அல்லது இரட்சிக்கப்பட்டாலும் பரிசுத்தமாய் வாழ்வது முடியாத காரியம் என்று “ சீ இந்த பழம் புளிக்கும் என்று பரிசுத்தமாய் வாழும் போது ஆலயத்திற்கு வருகிறேன் என்று முடிவெடுத்தால் கல்லறைக்குச் செல்லும் போதும் பரிசுத்தத்தை காணமுடியாது.  இல்லை நம்மைப்போல் தான் எல்லோரும்¢ நடிப்பார்கள் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பீட்டு கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிந்து விடாதே.  அண்ணே விசயத்துக்கு வாங்கன்னு நீ கூப்பிடுவது கேக்குது தம்பி.

             கிறிஸ்துவுக்குள் எனதருமை பிள்ளைகளே முதலாவது ஒரு பாவி மனம் திரும்பும்போது அவனுடைய பாவம் மன்னிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அவனுடைய ஆத்துமா கழுவப்படுகிறது.  இந்தக் காரியத்தில் முழுவதையும் இயேசு கிறிஸ்துவே செய்து விடுகிற படியால் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது விசுவாசத்தை மாத்திரம் தான்.  இப்போது ஆதாமுக்குள் மரித்திருந்த உன் ஆவி கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பு அடைந்தாகிவிட்டது.  இப்போது உன் ஆவி உயிர்ப்பு அடைந்து விட்டதால் இது வரை விரோதமாகப் பார்த்த போதகர் உனக்கு தேவ தூதனைப் போல் தெரிகிறார்.  இதுவரை ஆராதனை எப்போது முடியும் என்பதிலே கவனமாய் இருந்த நீ எப்போது ஞாயிற்றுக் கிழமை வரும் தேவனை எப்போது ஆராதிக்கலாம் என்று எதிர்பார்ப்பாய்.  ஆம் உண்மைதான் இவ்வளவு இருந்தும் ஏன் பரிசுத்தமாய் வாழமுடியவில்லை.

             உன் ஆவி உனக்குள் இயேசு கிறிஸ்துவினால் உயிரப்¢பிக்கப்பட்டாலும் உன் ஆத்துமாவிலே பாவத்தை மேற்கொள்ள அல்லது பாவ சூழ்நிலைகளை விட்டு ஒடுகிற பெலன் இல்லை.  எனவே பாவத்தில் இருந்து மீள முடியவில்லை.  சிறு குழந்தையைப் பார்க்கிறோம் நம்மைப்போல் உயிர் இருக்கிறது.  சிரிக்கிறது, பால் குடிக்கிறது, அழுகிறது.  நம்மைப்போல் கால்களும் கையும் அதற்கு இருந்தாலும் அக்குழந்தையால் நடக்க முடியவில்லை நம்மைப்போல் ஓட முடியவில்லை.  காரணம் அக்கால்களுக்கு பெலன் இல்லை ஆதலால் அது தவழுகிறது.  இதைப்போலத்தான் இரட்சிப்பின் போது ஆவி உயிர்மீட்பு அடைந்தாலும் அதைத் தொடர்ந்து ஆத்துமா பெலனடையாவிட்டால் ஸ்திரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது.


            அண்ணே எப்படின்னே ஆத்துமாவில் உயிர்ப்பிக்கப்படுகிறது.  சொல்லுங்கண்ணே என்று கேட்பது கேட்கிறது.  தம்பி சங்கீதம் 19:7 ல் சொன்னபடி கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது.  ஆம் கர்த்தருடைய வேதத்தை நேரமெடுத்து வாசித்து அதை உட்கார்ந்து அமைதியாய் தியானித்து அதை மனப்பாடம் செய்து தன் இருதயத்தில் அசை போடுகிற ஒருவன் கண்டிப்பாக பரிசுத்தமாய் வாழ முடியும்.  ஐயோ கடைசியில எங்க பாஸ்டர் சொல்ற படி பைபிள் படி பைபிள் படி என்று சொல்றீங்களேண்ணே.  ஆமாம் தம்பி பரிசுத்தமாய் வாழ்வதற்கு அதைத் தவிர வழியில்லையே.  வேதத்தைப் படிப்பதால் மட்டுமல்ல அதை தியானிப்பதால் பாவம் உன்னை அண்டமுடியாது.

             மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல் அலையும் மனதை அடக்க வேண்டுமானால் அமர்ந்திருந்து வேதத்தைக் கற்றுத்தான் ஆக வேண்டும்.  பார்த்தவுடனே மனசு எங்கிட்டேயிருந்து அவங்க பின்னாலே ஓடுதே அப்படியா.  கர்த்தருடைய வேத வசனங்களால் மனதைச் சுற்றிலும் மதில் எழுப்பு, யார்¢ வந்தாலும் போனாலும் மனசுக்கு தெரியாமலே போய் விடும்.  இச்சையென்றும் அலை இழுத்துச் சென்று நடுக்கடலில் அமிழ்த்துப் போடுகிறதே, அப்படியா வேதவசனங்களால் அவ்வலைகளுக்கு இருதயத்தில் எல்லையிட்டு இதற்கு மிஞ்சி வராதே என்று கட்டளையிடலாமே.  என் நண்பன் அழைக்கும் இடமெல்லாம் அடிக்கபப்டும் மாட்டைப் போல செல்கிறேனே, சென்று வந்த பின் என்னையே நொந்து கொள்கிறேனே அப்படியா.  வேதவசனங்களால் உன் இதய வீட்டை நிரப்ப நிரம்பியதும் அங்கிருந்து ஒரு ஊற்று புறப்படும்.  அதிலிருந்து ஜீவத்தண்ணீர் வெளிவந்து  முதலில் சிறு கால்வாயாக மாறி பின்பு சிற்றோடையைப் போல் அதன் பின் நதியைப் போல் மாறி கடைசியில் கடலைப் போல மாறி அதில் வீசும் அலைகள் உன் நண்பர்களையும் இழுத்து வந்து தேவனிடம் கரை சேர்க்கும் தம்பி.  Internet ல் அமர்ந்து என் கையும் என் கண்களும் என் சிந்தையையையே சீர்குலைத்து குற்ற உணர்வோடு நடை பிணத்தைப்போல் இருக்கிறேனே.  செத்துப் போயிருக்கிற உன் ஆத்துமாவை ஜீவ வார்த்தைகளால் எழுப்பினால் உன்னைப்போல் நடை பிணங்களை கிறிஸ்துவுக்காக உயிரடையச் செய்ய முடியுமே.

எழுதியவர்

சகொ.ரெவரண்ட் செல்வகுமார் (சென்னை)

 

Comments  

 
0 #5 yazhini 2010-08-17 11:08
its quite interest for past day i have confused with the problem but now god interact with me through your message
Quote
 
 
-1 #4 Archuthan 2010-07-18 20:05
Dear Bro,
Thank You for given the message this is all true in my Life. and I read the Bible Every Day and I will Follow Jesus.

Thank You By Archuthan
Quote
 
 
+1 #3 Johnson Victor 2010-07-14 19:57
படித்தேன், பயனடைந்தேன். நன்றி
Quote
 
 
+2 #2 Rukmani 2010-06-14 11:50
அருமை! கொஞ்சம் நாட்களாகவே, ஏன் அநேகரிடம் மனந்திரும்புதல் , பாவத்தை அறிக்கையிடல், கதறல் இல்லையே என்பதே என் சிந்தையில் ஓடிக்கொண்டிருந் தது. இந்த கட்டுரை மனதுக்கு ஆறுதலாக இருந்தது. நன்றி பிரதர்.
Quote
 
 
+2 #1 timothy 2010-06-12 18:33
//ஆம் கர்த்தருடைய வேதத்தை நேரமெடுத்து வாசித்து அதை உட்கார்ந்து அமைதியாய் தியானித்து அதை மனப்பாடம் செய்து தன் இருதயத்தில் அசை போடுகிற ஒருவன் கண்டிப்பாக பரிசுத்தமாய் வாழ முடியும். //

This is very true... (also in my life...)
If we store verses and meditate with full heart, it will guards us.
In every situations that have temptation, It will start to speak with us.. If we obey to that warning, we can easily escape from that danger( As told in Bible, There s always a way to escape.. I cori 10-13)
Quote
 

Add comment


Security code
Refresh

 மார்ஸ்மேடை
" Rosh HaShanah " greetings..! 09-09-2010 12:33:57 chillsam
கிறிஸ்தவ மேற்கோள்கள் - Quotes 09-09-2010 05:59:18 arputham
Re:தேவ ஊழியர்களை கூறுவதை தவிர்க்கவும்! 08-09-2010 23:46:12 SundarP
Re:கல்லால் அடிக்கும் தண்டனை: வாடிகன் எதிர்ப்பு 08-09-2010 22:46:28 josephsneha
Re:"மறக்க முடியாத மாமனிதர்கள்" 08-09-2010 21:51:04 SundarP
பாகிஸ்தானில் நாத்திகர்களாக மாறும் இஸ்லாமியர்கள் 07-09-2010 15:28:17 robin
திருவிடைச்சேரி இஸ்லாமியர்களிடையே மோதல் 07-09-2010 14:45:08 robin
Re:Re:இயேசு உயிரோடிருக்கிறார்! 07-09-2010 04:12:07 sarav
பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் யூனி கோடு எழுதியை நிறுவுவது எப்படி? 06-09-2010 18:08:44 rajkumar_s
Re:கிறிஸ்தவ வாழ்வின் தன்மை 06-09-2010 17:08:22 colvin
Re: வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...! 06-09-2010 16:14:23 colvin
Re:Stephen Hawking's Confusion 06-09-2010 15:59:30 rajkumar_s
வாலிபர் மூவர் கீதம் 06-09-2010 15:20:50 josephsneha
Re:அர்த்தமுள்ள இந்துமதம் கொடுத்த கண்ணதாசன் மகள் விசாலி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் 06-09-2010 14:54:46 josephsneha
தேவனுடைய பிள்ளைகள் என்பார் யார்? 04-09-2010 06:22:09 chillsam

Who's Online

We have 413 guests and 1 member online
  • robin