Tamil Christian Songs

Download MP3 Song, News, Music, Audio and Video

Friday
Sep 10th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home சமூகம் Fashion and Beauty சூழ்ச்சி - வீழ்ச்சி - எழுச்சி

சூழ்ச்சி - வீழ்ச்சி - எழுச்சி

E-mail Print PDF
User Rating: / 8
PoorBest 
சிறகொடிந்த பறவை மீண்டும் உயரங்களில் பறக்க முடியுமா? கால் ஒடிந்த கவரிமான் மறுபடியும் கன்மலையின்மேல் தாவிக்குதித்துஓட முடியுமா? பயங்கரமான பாவ படுகுழியிலே விழுந்துபோன விசுவாசி, பின்வாங்கிப் போனவன் மறுபடியும் தேவனுக்கு ஊழியம் செய்யமுடியுமா? அவருக்கென்று பிரகாசிக்க முடியுமா?

நிச்சயமாய் தேவகிருபையினாலே முடியும்.

சூழ்ச்சியாலே வீழ்ச்சி தர சுற்றிலும் வலை விரித்தாலும்
சாத்தான் விதவிதமாய் வியூகங்கள் தந்திரமாய் அமைத்தாலும்
விலக்கப்பட்ட கனியதனைப் பறித்துப் புசிக்கச் செய்தாலும்
ஜீவ விருட்ச கனியைத்தர ஜீவனையே தந்துவிட்டார்.

இச்சைக்கு இடங்கொடுத்து ஏதேனை இழந்துவிட்டாலும்
பட்சமாய் இரட்சிக்கும் இயேசுவை நாம் இழக்கவில்லை
மேட்டிமைக்கு இடங்கொடுத்து மேன்மையை இழந்தாலும்
முத்திரிக்கப்பட்ட நம் புத்திரசுவீகாரத்தை இழக்கவில்லை

விழுந்தவர்கள் எழுந்திருப்பதில்லையோ? - தவறுதலாய்
வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? ஆகையால்
இன்ன நிலையிலிருந்து விழுந்தேன் என்பதை நினைத்து
மறுபடியும் எழும் எவரையும் மகிமையால் நிறைத்திடுவார்

விழுந்து போன் தூதன் அவன் வீண்முயற்சி பலிக்காது
இழந்து போன உன்னை அவர் தேடும் முயற்சியும் நிற்காது
ஏழுதரம் விழுந்தாலும் நீதிமான் எழுந்திருப்பான்
இரட்சிக்கப்பட்ட ஜனமே யார் உனக்கு ஒப்பாவான்?

பிழை என்னும் புயல் பரவி புகழ்மரத்தை சாய்த்தாலும்
அழைப்பை பெற்ற தேவமனிதன் உன்னையது சாய்ப்பதில்லை
செதுக்குகின்ற சிற்பியவர் சேவை விட்டு ஒதுக்கவில்லை
தண்டித்தபோதும் அவர் உன்னிலுள்ள தாலந்தை எடுப்பதில்லை

நா அசைவால் நாறும் பிணம் நடக்கும்போது
சிறகொடிந்த பறவை சீர் பெறாதா?
உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் போது
உன்னதர் ஊழியம் உயிர்பெறாதா?

மூன்று முறை விழுந்தாலும் பேதுரு மூவாயிரம் பேரைஎழுப்பிவிட்டான்
தவறிய தாவீது தன்காலத்தில் தேவ சித்தம்செய்திட்டான்
தூக்கிஎடுப்பாரே கர்த்தர் விழுவோரை தம் கிருபையால் தாங்கி


Source:தேன்.டேவிட். சத்தியவசனம்
 

Add comment


Security code
Refresh

 மார்ஸ்மேடை
ஆசீர்வாதம் டிவியில் புரட்சிகரமான கருத்து..! 11-09-2010 05:02:07 chillsam
:" Rosh HaShanah " greetings..! 11-09-2010 03:20:24 arputham
தேவ பயம் - கிலோ என்ன விலை? 11-09-2010 03:05:07 arputham
Re:ரம்ஜான் வாழ்த்துக்கள் 11-09-2010 02:15:48 chillsam
Re:கல்லால் அடிக்கும் தண்டனை: வாடிகன் எதிர்ப்பு 11-09-2010 01:48:28 colvin
Re:இயேசு உயிரோடிருக்கிறார்! 11-09-2010 00:55:30 jones_bond
Re:குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா? - Umar 10-09-2010 20:24:37 timothy_tni
Re:தேவ ஊழியர்களை கூறுவதை தவிர்க்கவும்! 10-09-2010 15:43:16 SundarP
Re:அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று- கடைசி கால தொழில் நுட்பம் ஆரம்பம் 10-09-2010 06:40:04 sarav
"மறக்க முடியாத மாமனிதர்கள்" 09-09-2010 14:26:49 arputham
கிறிஸ்தவ மேற்கோள்கள் - Quotes 09-09-2010 05:59:18 arputham
பாகிஸ்தானில் நாத்திகர்களாக மாறும் இஸ்லாமியர்கள் 07-09-2010 15:28:17 robin
திருவிடைச்சேரி இஸ்லாமியர்களிடையே மோதல் 07-09-2010 14:45:08 robin
பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் யூனி கோடு எழுதியை நிறுவுவது எப்படி? 06-09-2010 18:08:44 rajkumar_s
Re:கிறிஸ்தவ வாழ்வின் தன்மை 06-09-2010 17:08:22 colvin

Who's Online

We have 565 guests and 4 members online
  • ButLymnenessy
  • FERINCIND
  • augzoobax
  • vemorent