|
மார்ஸ் மேடை |
|
|
|
|
|
Subject :Re:முன்னாள் இஸ்லாமிய தீவிர..
17-05-2013 14:10:14
|
|
|
|
|
|
|
Subject :Re:முன்னாள் இஸ்லாமிய தீவிர..
17-05-2013 13:09:35
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
சாட்சிகள்
Topic :
முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி கிறிஸ்துவின் தீவிர விசுவாசி
Subject :Re:முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி கிறிஸ்துவின் தீவிர விசுவாசி
உள்ளத்தை உருக்கும் நல்ல சாட்சி. நேற்றுதான் பரி.பவுலின் வரலாற்றை இஸ்லாமியர்கள் மாற்றுவதற்குப் படாத பாடு படுவதாக அறிந்தேன். இந்த இஸ்லாமிய சகோதரரின் வரலாற்றையும் அதே போல் மாற்றுவதற்கு வகை தேடுவாகர்கள் என்பது எனது அனுமானம். |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|
|
Subject :முன்னாள் இஸ்லாமிய தீவிரவ..
17-05-2013 11:49:47
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
சாட்சிகள்
Topic :
முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி கிறிஸ்துவின் தீவிர விசுவாசி
Subject :முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி கிறிஸ்துவின் தீவிர விசுவாசி
கமல் சலீம் - ஓர் சவுல் மீண்டும் நடுரோட்டில் இயேசுவை கண்ட அதிசயம் முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி இன்றைய தீவிர விசுவாசி
1957 ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர் ஒரு சுன்னி முஸ்லிம் ஆவார். அதோடு சலீம் ஒரு தீவிர யூத விரோதியாவர்.
இன்றோ, கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.
4 வயது குழந்தையாய் இருக்கும் போதே இவருடைய தாயார் அமெரிக்கர்களையும், யூதர்களையும் கொன்று குவித்து முகமதிய சமயத்திற்காக உயிர் துறக்கும் தியாகியாக மாற வேண்டும் என்று போதிக்கபட்டார் 7 வயதில் முதற் முயற்சியாக ஆயுதங்களை கடத்தும் குழந்தையாக அப்போதைய பாலஸ்தீன தீவிரவாத தலைவர் யாசர் அராபாத்துக்காக செயல்பட்டார். 15 வயதில் வெடிமருந்துகளில் மன்னனான இவர், லிபிய முன்னாள் அதிகாரியான முகமது கடாபியின் ஆட்சிகாலத்தில் அங்குள்ள பாலைவன தீவிரவாத முகாம்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார்.
வாலிபனான பொது இவரின் தீவிரவாத மூர்க்கம் அதிகரித்தது. பாரிஸ், லண்டன், ஆப்கானிஸ்தான், செல்வசெளிபுள்ள அரபு ஷேக்குகளிடம் சென்று தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான நிதிகளை திரட்டி வந்தார். உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதே இதன் அடிப்படை. அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள நலிந்த மக்களை தன்னுடைய திறமையால் முகமதிய மதத்திற்கு மாற்றினார்.
இதன் மத்தியில் ஓர் நாள் கொடுமையா விபத்தொன்றில் சிக்கினார். இவர் இவரின் இயக்கங்களுக்கு பணம் திரட்டிய போதும் தன்னை பற்றியோ, குடும்பத்தை பற்றியோ கவலை பட்டதில்லை. மருத்துவ காபீடோ, குடும்பத்தில் போதிய பணமோ இல்லாததினால் படுத்த படுக்கை ஆனார். இவரை கவனிக்க ஆளில்லாமல் மிகவும் வருத்தப்பட்டார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர்.
கிறிஸ்தவர்களின் அன்பு இவரின் மனதை மாற்றியது. இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தேவனை அதிகமாக நேசிப்பவர். இவரை காப்பாற்றின கிறிஸ்தவர் கமல் சலீமை தன்னுடைய வீட்டில் தங்க சொன்னார். கமல் சலீம் குணம் அடைய கிறிஸ்தவ கூடுகைகளில் ஜெபம் செய்யப்பட்டது. இவருக்காக காணிக்கையும் எடுத்தார்கள். இதை பார்த்த கமல் சலீமின் மனம் உடைந்தது. அல்லாவிடம் ஜெபம் செய்தார். தீவிரவாத முகாம்களில் அன்பை பற்றி போதிதிராத காரணத்தினால் இவர் கிறிஸ்தவரின் அன்பை புரிந்து கொள்ளவில்லை. ஏன்? அல்லா தன்னை கைவிட்டு விட்டாரோ? ஏன் என்னை இந்நிலைமைக்கு ஆளாக்கினார் என்று இவர் கேள்விக்கு அல்லாஹ்விடம் இருந்து பதில் வரவில்லை. "அல்லாஹ், என்னை ஏன் எதிரிகள் கைகளில் ஒப்படைத்தாய்? இவர் அல்லாஹ்வின் அற்புதத்தை பார்க்க விரும்பினார். "அல்லாஹ்.. நீர் இருப்பது உண்மையானால், நான் உன் குரலை கேட்க வேண்டும்" என்று கதறினார். ஒன்றும் நடக்கவில்லை.
அநேரத்தில் இவரின் மனதில் "ஏன் நாம் ஆபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாகோபின் தேவனை கூப்பிடகூடாது?" என்ற கேள்வி எழுந்தது. அதி முதல் 'யேகோவா தேவனை" நோக்கி கூப்பிட ஆரம்பித்தார். அப்போது ஆணிகள் கடாவபட்ட இரு கரங்கள் இவருக்கு முன்பாக பயங்கர பரிசுத்த தேவன் காண்பித்தார்.
இயேசு கிறிஸ்து கமல் சலீமிடம் பேச ஆரம்பித்தார். அவரின் இனிய குரலை முதன் முதலாக கமல் சலீம் கேட்டார். பரிசுத்த தேவன் தான் கமல் சலீமை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை அன்போடு, கனிவோடு பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு கமல் சலீமின் காயங்கள் முழுவதும் ஆறிப்போனது. அதிசயத்தின் தேவன் மீண்டும் ஓர் சவுலை பவுலாக மாற்றினார். அல்லேலூயா.... ஆமென்..
வேதாகமத்தை வாசிக்க வாசிக்க தேவன் தன்னிடம் பேசுவதை உணர்ந்தார். இன்று கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.
அன்பார்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளே, இவரை போன்ற ஆயிரம் ஆயிரம் சாட்சிகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஜெபியுங்கள். அன்பு கூறுங்கள். தேவன் உங்கள் அருகில் உள்ள அனைவரிடமும் பேச முடியும். நம்மை முழுவதுமாக தாழ்த்துவோம்.
எபிரெயர்.12: 1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள் |
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலு..
17-05-2013 09:36:13
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
இஸ்லாம் கிறிஸ்துவ விவாதங்கள்
Topic :
கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (1)
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (10)
அத்தியாயம் இரண்டு - வரலாற்று ஏடுகள் அந்நிய ஜாதியாரின் பதிப்பேடுகள் பொந்தியு பிலாத்துவின் நடபடிகள் யூதர்களின் பதிப்பேடுகள் தால்முத் “ நாஸ்டிக்குகளின்”எழுத்துக்கள் கிறிஸ்தவ ஆவணங்கள் கூடுதலான சான்றுகள். வரலாற்று ஏடுகள் கிறிஸ்துவின் மரணத்தை நிச்சயப்படுத்தும் உறுதிப்பாடுகள் வரலாற்று நூல்களில் அநேகமிருக்கின்றன. புறஜாதிகள், புறமதத்தினர்கள், யூதர்கள், பகுத்தறிவுவாதிகள், மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரின் இலக்கியங்களிலும், நூல்களிலும் கிறிஸ்துவின் மரணம் பல சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றன. கிறிஸ்துவின் வாழ்க்கையும், மரித்தவிதமும் பற்றி ஏராளமான, ஆனால், ஒரே சீரான குறிப்புகள் உண்டு. இந்தச் சான்றுகளில் சற்று ஆராய்வோம். அஞ்ஞானிகளின் பதிப்பேடுகள் இந்த அஞ்ஞானிகளின் நூல் ஆதாரங்கள் இந்த ஆய்வில் முக்கியமான பங்கு வகிக்கின்றன; ஏனெனில், முதற்கண் அவர்கள் கிறிஸ்தவச் சமயத்தைச் சேர்ந்தவர்களுமல்ல, அநுதாபிகளுமல்ல, மேலும் இவை கிறிஸ்தவ சமயத்தைத் தூர்த்து, அவதூறு செய்யும் நோக்கத்தோடு கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே அல்லாமல் பாராட்டுவதற்காக எழுதப்படவில்லை. நமக்குக் கிடைக்கக் கூடிய அஞ்ஞானிகளின் எழுத்துக்கள் எல்லாம் முதலிரண்டு நூற்றாண்டுகளில் தோன்றியவை. எனினும் கிறிஸ்துவின் மரணத்தையும். அவரது காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகளையும் சாட்சிப்படுத்துகின்றன. அக்காலத்திலுள்ள அரசியல் சமய நிகழ்ச்சிகளின் பின்புலத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆசிரியர்கள் எழுதியிருப்பதால் அவர்களின் சாட்சிகளைக் கவனிப்பது மிகவும் பயனளிக்கும் அவர்களுள் தலை சிறந்தவர் கொர்நேலியு டாஸிட்டஸ் (கி.பி.55-120) இவர் உண்மைக்கும். நாணயத்துக்கும் பிரசித்தி பெற்ற ரோமவரலாற்று ஆசிரியர். ஆறு பேரரசர்களின் வாழ்வையும் தாழ்வையும் கண்ட மிகப்பெரிய வரலாற்று மேதை என்று கருதப்பட்டார். அவருடைய புகழ்வாய்ந்த நூல்கள் காலக்குறிப்புகளும் சரித்திரங்களும் என்ற தலைப்பில் வெளியாகியிருந்தன. ‘காலக்குறிப்புகளில்’ 18 நூல்களும்‘ சரித்திரங்களில் 12 நூல்களும் அடங்கும் ரோம சாம்ராஜ்யத்திலே கி.பி. 88 இல் ஒரு மாஜிஸ்ட்ரேட்டாகவும். 97இல் ஒரு நீதிபதியாகவும். 122 இல் பிரதான நீதிபதியாகவும் டாஸிட்டஸ் பணியாற்றியுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்த உயர்ந்த பதவிகளை வகித்தபடியால் கிறிஸ்துவைப் பற்றியும் கிறிஸ்தவர்களைப் பற்றியும் உள்ள அதிகார பூர்வமான ரோம ஆவணங்களைப் பார்வையிடுதல் டாஸிட்டஸூக்கு நிறையவாய்ப்புகளும் வசதிகளும் இருந்தன என்று புரூஸ் என்ற சரித்திர ஆசிரியர் கூறுகிறார். அவருடைய இரண்டு அல்லது மூன்று முக்கியமான நூல்களில் நமக்குத் தேவையான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அவருடைய “காலக்குறிப்புகள்’ ஒன்றில். “பொதுமக்களால் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு வகுப்பார் பல விபரீதமான கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்டவர்கள் என்ற வதந்தி பரவியிருந்ததால், நீரோ மன்னன் தனது உக்கிர பகையையும். வஞ்சகத்தையும் தீர்த்துக் கொள்ள கிறிஸ்தவர்களை மகா பயங்கரமான கொடுமைகளுக்கும். உபத்திரவங்களுக்கும் உள்ளாக்கி தன் மீதிருந்த குற்றச்சாட்டை மறைக்கும்முகந்தான் கிறிஸ்தவர்களைத் தனது பலிக்கடாவாக்கினான். திபேரியு இராயன் காலத்தில்பொந்தியு பிலாத்து யூதேயாவிலே தேசாதிபதியாயிருக்கும்பொழுது கிறிஸ்டஸ் என்றவன், இதிலிருந்து அவனைப் பின்பற்றுவோருக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயருண்டாயிற்று எந்த அஞ்சாநெஞ்சனும் பயந்து நடுங்கும் கொடியகொலைத் தண்டனைக்கு (சிலுவை மரணத்துக்கு) உட்படுத்தப்பட்டான். அவன் உயிரோடெழுந்தான் என்ற வஞ்சகமும், மூடநம்பிக்கையும் முதலில் ஒடுக்கப்பட்டிருந்தாலும், பின்னர் எங்கும் பரவி, உலகிலுள்ள எல்லாத் துன்மார்க்கங்களும் வெட்கக்கேடான காரியங்களும் இருப்பிடம் காணும் ரோமாபுரிக்கும் வந்து, ஸ்திரப்பட்டு பிரபலமாகி வருகிறது. என்று எழுதிவைத்தான். இந்த உலக எழுத்தாளரின் நாட்குறிப்பிலிருந்து, கிறிஸ்தவத்தின் ஆணி வேர் கிறிஸ்து என்றும், அவரது தொண்டர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்ற நாமம் தலைவர் பெயரால் உண்டாயிற்று என்றும், யூதேயாவின் கவர்னர் பொந்தியு பிலாத்து தான் கிறிஸ்துவுக்கு மரணத் தீர்ப்பு வழங்கினான் என்றும் எவ்வளவு திருமறைக்கு இசைவாய் பதிவாகியிருக்கிறது. டேஸிடஸ் குறிப்பிடும் மூடநம்பிக்கை வஞ்சகம் என்பது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையே குறிக்கிறது என்பதில் சந்தேகமுண்டோ? தல்லூஸ் (சுமார் கி.பி. 52) என்பாரும் கிறிஸ்துவின் மரணத்தைத் தெரிவித்த ஒரு பெரிய ரோம வரலாற்று ஆசிரியர் ஆவர். இவர் கிழக்கு மத்திய தரைக்கடல் நாகரீகத்தைப் பற்றி ட்ரோஜன்யுத்தம் முதல் தமது காலம்வரைக்குமுள்ள சரித்திரத்தைத் தொகுத்து எழுதியவர். அவருடைய வரலாற்று நூல்களில் ஜூலியஸ் ஆஃப்ரிக்கானஸ் என்பவர் பேணிப் பாதுகாத்து அவற்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் நமது தேவைக்குரியது கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றியும். அவர் சிலுவையில் வியாகுலப்பட்டுத் தமது ஆவியைத் தமது பிதாவின் கரங்களில் ஒப்படைக்கின்றவேளையில் உலகம் முழுவதையும் காரிருள் கவ்விக்கொண்டது. என்ற சம்பவத்தையும் தல்லூஸ் குறிப்பிடுவதை ஜூலியஸ் சுட்டிக் காட்டுகிறார்; “சரித்திரங்கள்“ எனப்படும் தமது மூன்றாவது நூலிலே அந்தக் காரிருள் சூரிய கிரகணத்தால் ஏற்பட்டது என்று அர்த்தமில்லாமல் மழுப்புகிறார்” கி.பி. 221இல் இந்த விளக்கம் நியாயமற்றது என்று ஜூலியஸ் விளக்கும்பொழுது. கிறிஸ்து சிலவையிலறையப்பட்ட தினம் பௌர்ணமி ஆகையால் அன்று சூரியகிரகணம் ஏற்படவாய்ப்பு கிடையாது. ஒருவேளை சந்திர கிரகணம் வேண்டுமானால் தோன்றலாம். அமாவாசை நாளன்று தான் சூர்ய கிரகணம் ஏற்படும் என்பது யாவருமறிந்த அறிவியல் உண்மை. யூதப்பண்டிகையின் பஸ்கா(ஈஸ்டர்) சமயத்தில்தான் முழுநிலவன்று இயேசு சிலுவையிலறையப்பட்டார். எனவே பூமியைப் போர்வை போல் மூடின இருள் தேவன் அனுப்பிய அற்புதமே அல்லாமல் அதற்கு அறிவியலால், பகுத்தறிவால் விளக்கம் கூறமுடியாது. தல்லூஸ் என்பவரைத் தவிர வேறு பல சரித்திர ஆசிரியர்களும் நடுப்பகலில் நள்ளிரவு ஏற்பட்டதைக்குறிப்பிட்டிருக்கின்றனர். அரியோபேகஸ் பட்டணத்தைச்சேர்ந்த டயோனீஸியஸ் இந்தக் காரிருளைக் கண்டவுடன் “இயற்கை தேவதை இப்பொழுது தியானம் செய்கிறாள் அல்லது பெரியார் ஒருவரது மரணத்துக்காக அழுது கொண்டிருக்கிறாள்” என்று கூறினாராம். இரண்டாம் நூற்றாண்டில் பிலிப்போன் என்ற ஜோதிடர், கிறிஸ்து மரித்த நாளில் ஏற்பட்ட அந்தகாரத்தைப் பற்றி கூறுகையில், “இதற்குமுன்பு சரித்திரத்தில் ஒரு போதும் இப்படி ஏற்பட்டதில்லை” என்றாராம் அல்-ஹாபீஸ் இபின் கஃதிர் என்ற முஸ்லீம் சரித்திர நிபுணரும் அல்-பிடயா வால் ஹா அல் நிஹயா (நூல் 1 பக்கம்182 இல்) இச்சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். (வளரும்) |
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :Re:எவராவது பரிசுத்த ஆவிக்க..
17-05-2013 09:25:00
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
கட்டுரைகள்
Topic :
எவராவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் (மத். 12:32)
Subject :Re:எவராவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் (மத். 12:32)
இத்தளத்தில் பதிக்கப்பட்ட சுவிஷேசங்கள் தொடர்பான இதர கட்டுரைகள் மத்தேயு உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு (மத். 5:29-30) நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், ….. ,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.(மத்தேயு 10:5-6) பூமியின் மேல் … சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். (மத்தேயு 10:34) பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; (மத். 11:12) இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளது எடுத்துக் கொள்ளப்படும் (மத். 13:12) இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன்...வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை (மத். 16:28) இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.(மத்தேயு 23:9) என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46) மாற்கு அந்த நாளை குமாரனும் அறியார் (மாற். 13:32) லூக்கா இயேசு, 'மண்ணுலகில் அமைதியை...பிளவு உண்டாக்கவே வந்தேன்(லூக்கா 12:51) யோவான் தேவனுடைய ஒரே பேறான குமாரன் (யோவான் 3:16) காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறான்றையும் தாமாய் செய்யமாட்டார்( யோவான் 5:19) என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது (யோவான் 5:31) என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55) ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவான் 9:4) நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10:30) என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28) எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.....(யோவான் 20:23) திருமடல்கள் கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் (I கொரி. 11:3) கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் (1 கொரிந்தியர் 15:28) சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (கொலோசெயர் 1:15) இயேசு கிறிஸ்து தொடர்பான இதர கட்டுரைகள் பிறப்பு தொடர்பான கட்டுரைகள் கன்னிப் பிறப்பு கற்பனையா? பாடுகள், இறப்பு, உயிர்ப்பு தொடர்பான கட்டுரைகள் இயேசுகிறிஸ்துவின் மரணம் இயேசு மரித்து சிலுவையிலா? மரத்தூணிலா? காஷ்மீரில் இயேசுவின் கல்லறை.... ஜெருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது இயேசுநாதரின் கல்லறையா? இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா? இயேசு சிலுவையில் சங். 22ம் சங்கீதத்தை ஏறெடுத்தாரா? என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? (மத். 27:46) இயேசு கிறிஸ்து தொடர்பான இதர கட்டுரைகள் இயேசுகிறிஸ்து – ஞானம் – படைப்பு (நீதி. 8.22) இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1) தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் (வெளிப்படுத்தல் 3:14) இயேசு இந்தியாவிற்கு வந்தாரா? இயேசு திருமணம் முடித்தவரா? The Davinci Code திரைப்படம் சொல்லும் கதை உண்மையா? |
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :சிரியாவில் நச்சு வாயுத் த..
16-05-2013 15:31:31
|
|
|
|
|
|
|
Subject :Re:உலகளாவிய நிலையில் விசுவ..
15-05-2013 19:53:27
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
செய்திகள் - உலகம்
Topic :
உலகளாவிய நிலையில் விசுவாசிகள் ஒடுக்கப்படுகிற செய்திகள்
Subject :Re:உலகளாவிய நிலையில் விசுவாசிகள் ஒடுக்கப்படுகிற செய்திகள்ஈரான்: சாயிட், பெனாமுக்காக ஜெபியுங்கள்
ஈரான்: சாயிட், பெனாமுக்காக ஜெபியுங்கள்  மனிதநேய நடவடிக்கைகளில் ஈடபடுவதற்காக சாயிட் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டு தன் பெற்றோரோடு தங்கியிருந்தார். 2009ம் ஆண்டில் எச்சரிக்கப்பட்டதால், சாயிட் தன் முழு கவனத்தையும் மனிதநேய நடவடிக்கையில் திருப்பி தன் வீட்டில் ஐக்கியக் கூட்டங்களை நடத்தினார். அவருக்கு ஈரான்-அமெரிக்கா ஆகிய இரண்டு தேசங்களின் கூட்டு குடியுரிமை இருக்கிறது.  தேச நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாஸ்டர் சாயீட் தெகரானில் தடுத்து வைக்கப்பட்டார். அவர் நடத்திய வீட்டு ஐக்கியக் கூட்டங்கள், மேற்கத்திய நாடுகளோடு கைகூலியாக ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகிறார். மார்ச் 2013ல், ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்க அதிகாரிகள் அனுமதித்தாலும், இன்று வரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படாமல் இருக்கிறார்.  ஈரானிய குடிமை பெற்ற பென்ஹாம் கடந்த ஏப்ரல் 2011 முதல் காராஜ் சிறையில், ‘ஆட்சி முறைக்கு எதிரான பிரச்சாரம்’ என்ற குற்றச் சாட்டின் கீழ் சிறைப் படுத்தப் பட்டார். ‘தேச பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கை’ என்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தப் புதிய தண்டனை, கடந்த அக்டோபர் 2011ல், அவர் விடுவிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக விதிக்கப்பட்டது.    விசுவாசத்தின் நிமித்தம் சரீர ரீதியாகவும் மன ரீதியாவும் துன்புறுத்தப்படுகிற சகோதர சகோதரிகள் காராஜ் சிறையில் கடந்த மே 2011 முதல் அடைக்கப்பட்டதில் இருந்து, பென்ஹனின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருகிறது. குடற்புண் மற்றும் முள்ளந் தண்டு பிரச்சனைகளால் அவர் பாடுபட்டாலும், அவற்றிற்காகன சிகிச்சை அனுமதியை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். 2013ம் ஆண்டின் பன்னாட்டுக் காவல் பட்டியலில் ஈரான் 8வது இடத்தை வகிக்கிறது. சாயீட்டும் பென்ஹம்மும் கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறவும் இயேசுவானவரின் அனுதின நெறுங்கிய உறவும், தொடப்பட்ட சுகத்தையும் அனுபவிக்க வேண்டிக் கொள்ளுங்கள். சாயீட்டின் துணைவியார் நாக்மேயும், இரண்டு பிள்ளைகளும், பெற்றோர்களும் இயேசுவானவரின் பிரசன்னத்தையும் சமாதானத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெபியுங்கள். சாயீட்டுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள். அவர் விடுவிக்கப்பட்டு ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தடையில்லாமல் பயணித்து மனிதநேய நடவடிக்கையை மேற்கொள்ளும் அனுமதி கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படவும் வேண்டிக் கொள்ளுங்கள். கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் நடவடிக்கைகள் நிமித்தம் விசாரணைக்குக் கொண்டு வரப்படுகிற அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் ஞான வழிநடத்துதலை உணர்ந்து கொள்ளவும், குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படவும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழக்கில் சம்பந்தப்படுகிற அனைத்து அதிகாரிகளும் கிருபையை நேசிக்கவும், நீதியோடு செயல்படவும், கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும், அவரைப் பின்பற்றவும் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். மேல் விபரங்களை அறிய: http://morningstarnews.org/2013/01/iran-sentences-pastor-abedini-to-eight-years-in-prison/ http://www.churchinchains.ie/node/611 http://www.maghrebchristians.com/tag/pastor-behnam/ http://barnabasfund.org/UK/Iranian-convert-scalded-with-hot-water-while-seeking-asylum-in-Turkey.html |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|
|
Subject :எவராவது பரிசுத்த ஆவிக்கு ..
14-05-2013 15:52:28
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
கட்டுரைகள்
Topic :
எவராவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் (மத். 12:32)
Subject :எவராவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் (மத். 12:32)
இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயேஅநேகரால் கிரகித்துக் கொள்ள முடியாமலிருக்கும் வாக்கியம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவதைப் பற்றி அவர் குறிப்பிட்ட விடயமாகும். 'எந்தப் பாவமும் எந்தத் தேவ தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும் ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை“ என்று தெரிவித்த இயேசு “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை“ (மத். 12:31-32) என்று விளக்கினார். (1) இயேசுவின் இக்கூற்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளையும் வியாக்கியானங்களையும் உருவாக்கியுள்ளது.
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவது பாரதூரமான ஒரு குற்றம் என்பதைச் சகல கிறிஸ்தவர்களும் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இத்தகைய பாவத்தைச் செய்தவன் மனந்திருப்பினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்காதா? அல்லது இப்பாவத்தை மன்னிக்கக்கூடிய சக்தி இயேசுவின் சிலுவைப் பலிக்கு இல்லையே? என்பது ஒரு சாராரது கேள்வியாயிருக்கையில், மறுசாரார் மனுஷகுமாரனுக்கு விரோதமான பாவம் மன்னிக்கப்படும் எனக் கூறிய இயேசு, ஆவியானவருக்கு விரோதமான பாவம் மன்னிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தமையால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விட மேலானவரா? திரித்துவ நபர்கள் சம்மானவர்கள் என்றல்லவா? திரித்துவ நபர்கள் சமமானவர்கள் என்றல்லவா வேதம் போதிக்கின்றது. இயேசு இதை மறுதலிக்கின்றாரேஎனக் குழப்பமடைந்துள்ளனர்.
உண்மையில் இயேசுவின் இக்கூற்றை சரியான வித்ததில் நாம் விளங்கிக் கொள்வதற்கு, இவ்வாக்கியம் எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அவரால் சொல்லப்பட்டது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்(2) இதற்கு இக்கூற்று இடம்பெறும் வேதப்பகுதியை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உண்மையில் இயேசு பிசாசுக்களைத் துரத்தியபோது மக்கள் மத்தியில் அவரைப் பற்றி ஏற்பட்ட உயர்வான அபிப்பிராயங்கள் பரிசேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இயேசு பிசாசுக்களின் தலைவனின் உதவியுடன் பிசாசுக்களைத் துரத்துகின்றார் எனக் கூறத் தொடங்கினார்கள் (மத். 12:22-24) ஆனால் இயேசுவோ தான் தேவனுடைய ஆவியினாலேயே பிசாசுக்களைத் துரத்துவதை அவர்களுக்கு அறிவித்தார்.(மத். 12:28)(3) உண்மையில் இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் செய்த செயலைப் பரிசேயர்கள் பிசாசினால் செய்யப்பட்டதாக தூற்றினர். இதனாலேயே இயேசு, ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார்(மத். 12:31-32)இதிலிருந்து ஆவியானவருடைய செயலைப் பிசாசின் செயல் எனக் கூறுவதே ஆவியானவருக்கு எதிரான பாவம் என தெளிவாகின்றது. 31ம் வசனத்தில் தேவதூஷணம் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 'ப்ளஸ்ஃ பீமியோ“ எனும் கிரேக்கப் பதம்“எதிராகப் பேசுதல்” என்னும் அர்த்தமுடையது. “ஒருவருக்கு கேடும் தீங்கும் அபகீர்த்தியும் அவமானமும் ஏற்படும் விதமாகப் பேசுதல், தூற்றுதல், இகழிதல் எனும் அர்த்தங்களை இப்பதம் கொண்டுள்ளது.“(4) இதனால்தான் ஆவியானவருக்கு விரோதமாக தூஷணம் என்பதை அடுத்த வசனத்தில் இயேசு பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசுதல்” எனக் குறிப்பிட்டுள்ளார். (மத். 12:32) எனவே, ஆவியானவரின் செயலை நிந்தித்து அதைப் பிசாசின் செயல் என அவருக்கு விரோதமாகப் பேசுதலே இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவமாக இயேசுவால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், இயேசுவின் இக்கூற்றானது, “பரிசேயர்களது குற்றச்சாட்டுக்கான பதிலாகவே சொல்லப்பட்டுள்ளது. (5)“
ஆவியானவரின் செயலை பிசாசின் செயல் எனக் கூறுவதே ஆவியினாவருக்கு விரோதமாக பேசுதல் என்பது உண்மையாயினும் இத்தகைய செயலை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவம் என இயேசு கூறியது நமக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். “இயேசுவின் இக்கூற்றை பரிசேயர்களின் குற்றச்சாட்டை, அடிப்படையாகக் கொண்டே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசும் ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புகாக மன்றாடுகையில் அவனது பாவங்கள் நிச்சியமாக மன்னிக்கப்படும். ஆனால் இங்கு ஆவியானவருக்கு விரோதமாகப் பேசப்படும குறிப்பிட்ட ஒருவிதமான பேச்சைப் பற்றியே இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.(6) இதை அறியாத நிலையில் இயேசுவின் கூற்றை நிலையில் இயேசுவின் கூற்றை சரியான வித்த்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
உண்மையில் பிசாசுக்களை துரத்தும் இயேசுவின் செயலானது தேவனுடைய இராட்சியம் வந்துவிட்டது என்பதற்கான வெளிப்படையான அடையாளமாய் இருந்தது. (மத். 12:28)(7) பரிசேயர்கள் இயேசுவின் செய்தியை அதாவது தேவனுடைய இராட்சியம் வந்து விட்டது எனும் தேவ செய்தியை ஏற்றுக் கொள்ளாத்தோடு, அச்செய்தியை உறுதிப்படுத்தும்அவரது செயல்களை பிசாசின் செயல்களாகக் கருதி அவரை நிராகரித்தனர். இதனால் அவர்களது விமர்சனமானது அதாவது அவர் பரிசுத்த ஆவியினால் செய்த செயலை பிசாசின் செயல் எனக் கூறியது, அவர்கள் தேவராட்சியத்தையே நிராகரிக்கும் செயலாக உள்ளது. அத்தோடு அவர்களது விமரச்சனமானது “அறியாமையினாலோ இல்லையென்றால் அவிசுவாசத்தினாலோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல(8) பரிசேயர்கள் இயேசுவை நிராகரிக்க வேண்டும் எனும் உறுதியான தீர்மானத்தோடேயே எதிர்த்து வந்தனர். இயேசுவினால் செய்யப்பட்ட செயல்கள் தேவராட்சியம் வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திய போதிலும் அவரை மேசியாகவாக ஏற்றுக் கொள்ள மனமற்றவர்களாகவே பரிசேயர்கள் இருந்தனர். பரிசேயர்களின் இத்தகைய மனப்பாங்கை யோவான் 9ம் அதிகாரம் தெளிவாய்க் காண்பிக்கின்றது. பிறவிக்குருடனை இயேசு குணப்படுத்திய செயல் அவர் தேவன் என்பதற்கு உறுதியான அடையாளமாயிருந்த்து.( 9:32-33). ஆனால் பரிசேயர்கள் இயேசு யார் என்பது பற்றி ஏற்கனவே தங்களுக்கிருந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள மனமற்றவர்களாக, அவர் எத்தகைய செயலைச் செய்தாலும் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனும் பிடிவாத்த்துடன் இருந்தனர். (9:13-41) இத்தகைய மனப்பாங்குடனேயே பரிசேயர்கள் இயேசு கிறிஸ்து ஆவியானல் செய்த செயலைப் பிசாசின் செயல் எனக் கூறினர். இயேசுவின் செயலை நிராகரித்து அதைப் பிசாசின் செயல் எனப் பரிசேயர்கள் கூறியது, தேவனுடைய ராட்சியத்தையே நிராகரிக்கும் செயலாய் இருந்தமையால்(9) அவர்களது பாவம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத நிலையில் இருந்தது.
இவ்வசனத்தில் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இன்னுமொரு விடயம். இயேசு தனக்கு விரோதமாகப் பேசப்படுகனிறவைகள் மன்னிக்கப்படும் எனக் கூறியமையாகும். (10)இரட்சகரான இயேசுவுக்கு விரோதமாகப் பேசப்படுபவை மன்னிக்கப்படுகையில், ஆவியானவருக்கு விரோதமான விமர்சனம் மட்டும் எவ்விதத்தில் மன்னிக்கப்படமுடியாத பாவமாக இருக்கின்றது என்பது நம்முள் இயற்கையாகவே எழும் கேள்வியாக உள்ளது. உண்மையில் இயேசு இவ்வுலகில் இருந்த காலத்தில் அவரைப் பற்றிய முழுமையான அறிவு மக்களுக்கு இருக்கவில்லை. அவரைப் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்தன. “இயேசு உண்மையிலே யார் என்பது அக்காலத்தில் ஒரு மறைபொருளாகவே இருந்தது. (11) ஆனால் பரிசேயர்களினால் விமர்சிக்கப்பட்ட இயேசுவின் செயல், அதாவது அவர் தேவ ஆவியினால் பிசாசுக்களைத் துரத்தியமை தேவனுடைய ராட்சியம் வந்துவிட்டதற்கான வெளிப்படையான அடையாளமாக, எவராலும் மறுக்க முடியாத செயலாக இருந்தது. மக்கள் “அக்காலத்தில் இயேசுவுக்கெதிராகப் பேசியவைகள் அவர்கள் அறியாமையில் செய்தவைகளாக, அதாவது அவர் உண்மையிலேயே யார் என்பதை அறியாத நிலையில் இருந்தமையால் அவை மன்னிக்கப்படக் கூடிய பாவமாகவே இருந்தன. ஆனால் ஆவியானவரின் செயல் அப்படிப்பட்டதாயிருக்கவில்லை. அவை தேவன் செயல்படுவதற்கான வெளிப்படையானதும் தெளிவானதுமான அடையாளமாய் இருந்தன.இதனால் அவருக்கு விரோதமாகப் பேசப்பட்டவை, அறிந்து செய்யும் பாவமாக, தேவனை நிராகரிக்கப்பவையாக இருந்தன. இதனால் இவை மன்னிக்கப்படமுடியாதவை“ (12) என இயேசு தெரிவித்தார்.
குறிப்புகள் (1) இயேசுவின் இக்கூற்று வேத்ததில் இடம்பெறாத தோமாவின் நற்செய்தி நூலிலும் உள்ளது. (44ம் கூற்று)
(2) இன்று வேதவசனங்களைத் பலர் தவறாகப் புரிந்து கொண்டு குழப்பங்களைப் போதித்து வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தாம் உபயோகிக்கும் வேதவசங்களின் சந்தர்ப்ப அமைப்பை, அதாவது குறிப்பிட்ட வேதவசனம் எந்த சந்தர்ப்பத்தில் எதற்காகச் சொல்லப்பட்டது என்பதை அறியாமலும், அறிந்து கொள்ள முற்படாமலும் இருப்பதாகும்.
(3) லூக்காவின் சுவிஷேசத்தில் தேவ ஆவியினாலே என்பது தேவனுடைய விரலினாலே என்று உள்ளது. “வல்லமை தேவனிடத்திலிருந்து வந்துள்ளதை இவ்விரு சொற்பிரயோகங்களும் சுட்டிக் காட்டுகின்றன. (Leon Morris, Gospel According to Matthew, p. 316) தேவனுடைய செயலை அவருடைய விரலினால் செய்யப்படுவதாக கூறுவது யூதர்களின் பேச்சு வழக்க முறையாகும். (யாத். 8:19, 31:18) John Calvin, A Harmony of the Gospels, Volume : 2, p. 43)
(4) Colin Brown, Dictionary of New Testament Theology Volume 3. P. 341
(5) Donald A. Hugner, Mathew 1- 13 p. 347
(6) Leon Morris, The Gospel According to Mathew, p. 318
(7) இயேசு கிறிஸ்து இவ்வசனத்தில் நான் வேனுடைய ஆவியினால் பிசாசுக்களைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கின்றதே எனக் குறிப்பிட்டுள்ளார்.
(8) D.A. Carson Mathew, p. 291
(9) இது தேவனருளும் இரட்சிப்பை அனுபவிப்பதையே நிராகரிக்கும் செயலாக உள்ளது. (Word p. 347)
(10) தன்னை மறுதலித்து சபித்த பேதுருவை இயேசு மன்னித்த செயல் இதற்கான ஆதாரமாயும் உள்ளது.
(11) Word, p. 347
(12) Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 119
நன்றி - சத்தியவசனம் கட்டுரையாசிரியர் :- Dr. M.S. வசந்தகுமார். |
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலு..
13-05-2013 14:35:38
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
இஸ்லாம் கிறிஸ்துவ விவாதங்கள்
Topic :
கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (1)
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (9)
தீர்க்கதரிசனங்கள் இரண்டாவதாக இயேசு கிறிஸ்துவின் மரணம்உயிர்த்தெழுதலைப் பற்றி ஏராளமான முன்னறிவிப்புகள் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. வேதவாக்கியங்களின் படியே அவர் மரித்தார் / உயிர்த்தார் என்று தான் புதிய ஏற்பாடு நினைவு படுத்துகிறது. பழைய ஏற்பாட்டிலுள்ள முப்பத்தொன்பது நூல்களில் ஏசாயா என்ற ஒரே ஒரு புத்தகத்தைப் பொதுவாக நோக்கினாலே, இந்த சம்பவத்திற்காக தீர்க்கதரிசிகளாகிய இறைவாக்கினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் என்பது நன்கு புலப்படும்.இவற்றை எல்லாம் மேற்கோள் காட்டுவதென்றால் இப்பொழுது சமயமும் சந்தர்ப்பமும் போதாது. எனவே மிகாயில் லபீபின் “சிலுவையின் தார்பரியம்” என்ற விசேஷித்த நூலைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இயேசுவின் சாட்சி மூன்றாவதாக, கிறிஸ்துவும் தம்முடைய சீஷர்களுடன் உரையாடுகையில் அடிக்கடி தமது மரணம் உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டார். நான்கு சுவிசேஷங்களிலும் இதற்கு எண்ணிறந்த ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு ஒரு தலைவர் தமது மரணத்தைப் பற்றியே அடிக்கடி பேசி வந்தார் என்றால் ஒன்று அவர் உண்மையுள்ள யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். அல்லது பைத்தியக்காரனாகவோ, மனக்குழப்பமுள்ளவனாகவோ அல்லது பொய்யனாகவோ இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஐயகோ! இயேசுகிறிஸ்துவின் ஜென்ம விரோதிகளும், அல்லது எந்த முஸ்லீமும் அவரைப் பைத்தியம் பிடித்தவரென்றோ ,பொய்யரென்றோ குற்றஞ்சாட்டமாட்டார்கள் அப்படிச் சொல்வதற்கு எவருக்கும் வாய் கூசுமே ஆனால் அவர் போதித்தது, பிரசங்கித்தது, அல்லது தம்மைப் பற்றி கூறினது முற்றிலும் உண்மை. முக்காலமும் உண்மை என்று நாம் உறுதிப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். அவருடைய பாடு, மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலைப் பற்றி சுவிசேஷ நூல்களில் கூறப்பட்டவை சீஷரின் விஷமத் தனமென்றோ, பிற்சேர்க்கை அல்லது இடைச்சொருகல் என்றோ வாதிடுவது வீணும் வியர்த்தமுமாகும் என்று ஏற்கனவே கண்டோம் சீடர்களின் நாணயத்தை, நேர்மையை யாரும் கேள்வி கேட்டதுமில்லை, சந்தேகித்ததுமில்லை. அப்போஸ்தலனும் சுவிசேஷகனுமாகிய யோவான் தனது முதலாம் நிருபம் 1:1-2இல் “ ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும் எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்து சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று கூறுகிறான். ஏனைய அப்போஸ்தலர்களும், குறிப்பாக பேதுரு அப்போஸ்தலனும். இதனையே வலியுறுத்தி, உறுதிப்படுத்துகின்றனர். அவர்களெல்லாரும் நாணயமுள்ள, நம்பத் தகுந்த நேரடி சாட்சிகள். ஆனால் அவர்களுடைய சாட்சியிலும் மேன்மையுள்ளதாக கிறிஸ்துவே தம்மைப் பற்றி கொடுத்த சாட்சியாகும். அடிக்கடி ‘வேதவாக்கியம் நிறைவேறும்படி’ இந்தக் காரியங்கள் எல்லாம் சம்பவித்தன என்று கூறினதோடு. பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களெல்லாம் அவர்களுக்கு நினைவுபடுத்தி தமது வருகையின் நோக்கமே சிலுவை மரணம் என்பதை வலியுறுத்திக் கூறியும். போதித்தும். அவர்களும் போதிக்க வேண்டிய உண்மையான நற்செய்தி அதுவே என்றும் கற்பித்துக் கொண்டிருந்தார் . அவர்களை நோக்கி. “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிற வைகளையெல்லாம் நிறைவேற வேண்டியதென்று நான் உங்களோடிருந்தபோது, நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகள் என்றார் ......அவர்களுடைய மனதை அவர் திறந்து.... எழுதியிருக்கிறபடி “கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது”(லூக்கா24:44-46) என்றுரைத்தார். மேற்கூறிய வேத வசனங்களில் இரண்டு முக்கியமான உண்மைகள் அடங்கியுள்ளன. முதலாவதாக. பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்கதரிசன வாக்கியங்கள் அனைத்தும் வேறெந்த தீர்க்கதரிசிக்கும், நபிக்கும் பொருந்தாமல். இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மாத்திரம் பொருந்தும். மோசேயின் நியாயப்பிரமாணம் தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள். மற்றும் சங்கீதங்கள் என்று இயேசு குறிப்பிடுதல். சரித்திர புத்தகங்கள் நீங்கலாக முழுவதுமான பழைய ஏற்பாடும் அடக்கமாயிருக்கிறது. தம்மைப் பற்றியுள்ள இந்த எல்லா முன்னறிவிப்புகளையும் உரிமையுடன் மேற்கோள்காட்டின மாத்திரத்தில் அவர்களுடைய அகக்கண்கள் பூரணமாகத் திறக்கப்பட்டன. மேலும் இந்தத் தீர்க்கதரிசன வாக்கியங்களை அவர்களும் அடிக்கடி வாசித்தும் அறிந்தும். இவை யாரைக் குறிக்கிறதோ என்றும் சிந்தித்துக் கொண்டிருந்தனர் காரியங்கள் இவ்வாறிருக்க. தம்மைச் சுட்டிக் காண்பிக்கும் தீர்க்கதரிசன வசனங்களைக் கொண்டு தாமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட யூதர்கள் எதிர்பார்த்திருந்த மேசியா என்பதை இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு நிரூபித்துக் காண்பித்திருக்க. அதேவாக்கியங்களுள் சிலவற்றை முஸ்லீம்கள் தங்களுக்குச் சாதகமாகக் கையாண்டு. அவை முகம்மது நபியைக்குறிக்கிறது என்று விளக்க முயற்சிப்பது. வஞ்சகமானவை என்பதை இயேசு கிறிஸ்துவின் விளக்கத்திலிருந்தும். அவருடைய சீடர்களின் வியாக்கியானங்களிலிருந்தும் இந்நூலின் ஆசிரியர் தைரியமாகக் கூறுகிறார்.
இரண்டாவதாக, இயேசு முழு உரிமையுடனும், தெளிவுடனும் கூறுவதாவது. அவர் சிலுவையிலறையப்பட்டு மரிப்பதோடல்லாமல், மூன்றாம் நாளில் மீண்டும் உயிரோடெழும்புவார் என்ற உண்மையாகும். தமது சிலுவை மரணத்தை எவரும் மறுக்கவோ, மாற்றிக் கூறவோமுடியாதபடி ஆணித்தரமாக நிரூபித்த பின்னர். மூன்றாம் நாளில் கல்லறையிலிருந்து உயிரோடெழும்புவேன் என்பதையும் நிறைவேற்றிக் காண்பித்து விட்டபடியால். எந்த நாத்திகனும். இயேசுவே நீர் ஒரு பொய்யர் என்று அவர்முகத்திற்கெதிரில் கூறத் துணிய மாட்டான். (அத்தியாயம் ஒன்று முற்றிற்று) (வளரும்)
|
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :Re:Re:கிறிஸ்து மெய்யாகவே சில..
13-05-2013 14:26:39
|
|
|
|
|
|
|
Subject :வேத விளக்க விதிமுறைகள்..
10-05-2013 11:52:00
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
கட்டுரைகள்
Topic :
வேத விளக்க விதிமுறைகள்
வேதத்தை சரியாக விளங்கிக்கொள்ள நாம் வேதம் தனக்குள் கொண்டுள்ள சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்விதிகள் நாம் வேதத்தைத் தவறாக விளங்கிக் கொள்ளாமலிருக்கத் துணை செய்யும்.
அவ்விதிகளாவன: 1. வேதம் தனக்கெதிரானதும், முரணானதுமான எந்தப் போதனைகளையும் தன்னில் கொண்டிருக்கவில்லை. இது முதலாவது விதி. இவ்வாறு கூறுவதன் மூலம் வேதத்தில், அதன் போதனைகளுக்கெதிரான முரணான எந்தப் போதனைகளையும் நாம் ஒருபோதும் பார்க்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வேதத்தின் போதனைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பொருந்தி, ஒன்றுக்கொன்று இணைந்துபோவதாக அமைந்திருக்கின்றன. அவ்விதமாகவே கர்த்தர் வேதத்தை நமக்களித்திருக்கிறார். வேதத்தின் எந்தவொரு பகுதியிலாவது அதன் ஏனைய பகுதிகளில் காணப்படும் போதனைகளுக்கு முரணானதொரு போதனை இருப்பதுபோல் நமது பார்வைக்குத் தென்பட்டால் நமது பார்வையில்தான் முரண்பாடு இருக்குமே தவிர வேதத்தில் இல்லை. முரண்பாடுள்ளதாக நமது பார்வைக்குத் தென்படும் அந்தப்பகுதியை அதோடு தொடர்புடைய தெளிவான வேறு பகுதிகளின் அடிப்படையில் ஆராய்ந்து படித்தால் அந்தப் பகுதியின் போதனையை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
வேதத்தைப்பற்றிய இந்த உண்மையை மனதில் வைத்துக்கொண்டு நாம் வேதத்தைப் படித்தால் வேதத்தின் ஏனைய பகுதிகளுக்கு முரணான விதத்தில் எந்தப் போதனையையும் வேதத்தின் ஒரு பகுதியில் இருந்து உருவாக்குவதை நாம் தவிர்த்துக்கொள்ள முடியும்.
2. வேதப்பகுதிகளை அவற்றின் சாதாரண இலக்கண, வசன அமைப்புகளின் (Study according to the plain meaning of the Scripture) படிக்கும் போது அவ்வேதப் பகுதியில் யார் என்ன கூறுகிறார்கள்? எத்தகைய மொழி நடையில் அதாவது சாதாரண மொழி நடையிலா? அல்லது உருவக, உவமை நடையில் அது அமைந்துள்ளதா? அப்பகுதி ஒரு வரலாற்றுச் சம்பவமா? தீர்க்கதரிசனமா? அல்லது அது கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளதா? நடந்து கொண்டிருக்கும் அல்லது நடந்து முடிந்த ஒரு காரியத்தை விவரிக்கிறதா? என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு வேதப்பகுதியை நாம் வாசிக்கும் போது அது சாதாரணமாக இலக்கண, வசன அமைப்பின்படி எதைக் கூறுகிறதோ அதையே நாம் விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்குள் ஏதோ மறை பொருள் இருப்பதாக நாம் எண்ணி மயங்கக்கூடாது. ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கர்த்தர் தனது வார்த்தையின் மூலம் வெளிச்சத்தைத் தோற்றுவித்தார் (ஆதி. 1:3) என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் மறைபொருள் எதுவும் இல்லை. அதை வேதம் போதிக்கும் விதத்திலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக அதனை நாம் உருவகப்படுத்திப் போதிக்கவோ, அதற்கு வேறு பொருள் கொடுக்கவோ முயலக்கூடாது. அதேவேளை, உருவகமாகவும் உவமையாகவும் (யோ. 10, 15), தீர்க்கதரிசனமாகவும் (மத். 13) காணப்படும் பகுதிகளை அவற்றின் அடிப்படையிலேயே படித்து விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு வேதப்பகுதி சாதாரணமான மொழி வழக்கில் காணப்படுகிறதா? அல்லது உருவகமா? உவமையா? தீர்க்கதரிசனமா? என்பதை வேதமே தீர்மானிக்கிறது. அதை நாம் தீர்மானிக்கக் கூடாது. வேதத்தின் எந்தவொரு பகுதியையும் அந்தப்பகுதியின் இலக்கிய, இலக்கண அமைப்பின்படியே ஆராய வேண்டும்.
3. வேதப்பகுதிகளை அவை காணப்படும் பகுதியின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். (Always study the text according to its context.) வரலாறு, வேத விளக்க விதிமுறைகள் கலாச்சாரம், மொழி ஆகியவற்றை வேதத்திலிருந்து நம்மால் பிரிக்க முடியாது. இவற்றின் மத்தியிலேயே நாம் கர்த்தரின் வெளிப்படுத்தலைக் காண்கிறோம். வேதத்தைப் படிக்கும்போது இவற்றிற்கும் வேதத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்ற மனப்போக்கில் படிக்க முயலக்கூடாது. உதாரணமாக, பழைய ஏற்பாடு ஆரம்பம் முதல், கர்த்தர் தோற்றுவிக்கும் ஒரு நாட்டையும் அதன் மூலம் அவர் செயல்படுத்த முனையும் நோக்கங்களையும் தெரிவிக்கின்றது. பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது இதனை மறந்துவிட்டு நாம் படிக்க முயலக் கூடாது. அத்தோடு அங்கே தீர்க்கத்தரிசனப் பகுதிகளும் காணப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் இதேபோல் கிறிஸ்துவின் போதனைகளில் உவமைகளை நாம் பார்க்கின்றோம். உருவகங்களையும் பார்க்கிறோம். இவற்றை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். இப்பகுதிகளை நாம் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டுமானால் அவை காணப்படும் பகுதிகளை ஆராய்தல் அவசியம். உதாரணமாக தீர்க்கதரிசனப் பகுதிகளைப் பார்ப்போமானால் அவை தீர்க்கதரிசனம் என்று நாம் அறிந்து கொள்ளும்படி அவை காணப்படும் பகுதிகளே அதை நமக்குத்தெரிவிக்கும். கிறிஸ்துவின் உவமைகள் காணப்படும் பகுதிகளைப் பார்த்தால் அங்கேயும் கிறிஸ்துவே, தான் உவமைகளின் மூலமாகப் போதிக்கப்போவதாகத் தெரிவிப்பதைப் பார்க்கலாம். இவற்றைக் கவனத்தில் கொண்டே அப்பகுதிகளைப்படிக்க வேண்டும்.
முக்கியமாக ஒவ்வொரு வேதப் பகுதியையும் படிக்கும்போது, அதற்கு முன்னாலும் பின்னாலும் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்று எப்போதும் பார்ப்பது அவசியம். அதாவது, அப்பகுதி எங்கு ஆரம்பமாகி எங்கு முடிகிறது என்றுபார்த்து அதன் அடிப்படையில் அப்பகுதியைப் படிக்கவேண்டும். இதன் மூலம் நாம் அப்பகுதியைப்பற்றிய கூடுதலான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும், சில வேளைகளில் ஒரு வேதப்பகுதியின் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பப் பொருத்தத்தை (context) விளங்கிக்கொள்ள, அந்த வேதப்பகுதி காணப்படும் நூலின் பல அதிகாரங்களையும் அல்லது முழு நூலையுமே படிக்க நேரிடும். இவ்வாறு ஒரு பகுதியின் சந்தர்ப்பப் பொருத்தத்தை அறிந்துகொள்ள முயலாமல் நாம் வேதத்தைப் படிக்க முயலக்கூடாது.
இன்று பெந்தகொஸ்தே இயக்கம் மட்டுமல்லாது சுவிசேஷ இயக்கத்தாரும் கூட வேதத்தைப் படிக்கப் பயன்படுத்த வேண்டிய மிகவும் அவசியமான இச்சாதாரண வழிமுறைகளைக் கூடப் பயன்படுத்துவதில்லை. இதனால் மனம்போன போக்கில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க முற்படுவதோடு கேட்கும் மக்களையும் வேத ஞானமற்ற குருடர்களாக தொடர்ந்து இருட்டில் வைத்திருக்கும் நிலைமையை எங்கும்பார்க்கிறோம்.
4. வேதப்பகுதிகளை எப்போதும் ஏனைய வேதப்பகுதிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் (Compare Scripture with Scripture).வேதத்தின் எந்தவொரு பகுதியும் போதிக்கும் சத்தியத்தை நாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று அறிய நாம் அப்பகுதியை அதே விதமான போதனையைக் கொண்டுள்ள வேதத்தின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டுப் படித்துத் தீர்மானிக்க வேண்டும். இதன் மூலம் வேதபோதனைகளைத் தவறான முறையில் விளங்கிக்கொள்ளும் ஆபத்தைத் தவிர்த்து கொள்ளலாம். இம்முறையை ஆங்கிலத்தில் “Analogy of Faith’ என்று அழைப்பார்கள். ஒரு வேத சத்தியத்தை அதே சத்தியத்தைப் போதிக்கும் வேதத்தின் பல பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு விளக்கும்போது அச்சத்தியம் உறுதிப்படுத்தப்படுகின்றது. வேத வல்லுனரான ஏ. டபிள்யூ. பின்க் (A.W. Pink) இதை அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். இதன் மூலம் வேதபகுதிகளுக்கு நாம் நினைத்தவிதத்தில் பொருள் கூற முற்படும் ஆபத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். உதாரணமாக, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் அதை இழந்து போகலாம் என்ற தவறான போதனையை எடுத்துக் கொள்வோம். இதைப் போதிப்பவர்கள் இதற்கு உதாரணமாக அடிக்கடி எடுத்துக் காட்டும் வேதபகுதி எபிரெயர் 6:4-6 ஆகும். ஆனால் வேதத்தை முறையாகப் படித்துப் பார்த்தால்முழு வேதமும் ஒருவர் தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை இழந்து போவதில்லைஎன்று உறுதியாகப் போதிப்பதைப் பார்க்கலாம். ஆகவே இப்பகுதி வேதத்தின் ஏனையபகுதிகள் போதிக்கும் சத்தியத்திற்கு முரணானதைப் போதிக்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
அத்தோடு இப்பகுதி ஒருவர் இரட்சிப்பை இழந்து போகலாம் என்ற போதனையைத் தருவது போல் தென்பட்டாலும், உண்மையில் அது அமைந்துள்ள சந்தர்ப்பப் பொருத்தத்தின் அடிப்படையில் பார்க்கும்போது வேறொரு உண்மையையே விளக்குகிறது என்பதும் புலனாகும். அதாவது, வேத பிரசங்கத்தின் பாதிப்புக்குள்ளாகி பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் வந்து, வரப்போகும் காரியங்களைப்பற்றிய அறிவையும் கூட பெற்றுக்கொண்ட போதும் ஒருவர் உண்மையில் கிறிஸ்தவராக இல்லாமலிருக்க முடியும் என்றே இப்பகுதி போதிக்கிறது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட அனுபவங்களை எந்தவொரு மனிதனும் இரட்சிப்பை அடையாமலேயே அனுபவிக்க முடியும். ஆனால் இத்தகைய தற்காலிகமான அனுபவங்களுக்கும், நிரந்தரமாக ஒருவர் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டதனால் அனுபவிக்கக்கூடிய அனுபவங்களுக்கும் பெரும் வித்தியாசமுண்டு. தற்காலிகமாக வேதத்தில் ஏற்படும் ஆர்வம், கிறிஸ்துவில் ஏற்படும் பற்றுதல் ஆகியவை நல்லவையே ஆயினும் அவை கிறிஸ்துவை அறிந்துகொண்ட அனுபவத்தால் உருவானவையாய் இல்லாவிட்டால் நிலைத் திருக்க முடியாது. இதையே விதைப்பவனின் உவமையின் மூலம் (மத். 13) கிறிஸ்து நமக்குப் புலப்படுத்துகிறார்.
விதைப்பவன் விதைக்கும் சில விதைகள் நிலத்தில் சில காலம் தங்கியிருந்து முளைவிடுவதைப் போல கர்த்தரை உண்மையில் அறியாமலேயே சிலரால் அவரில் ஆர்வம்கொள்ள முடிகிறது. ஆனால் முளைவிடும் விதை எவ்வாறு ஆதவனின் கதிர்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமலும், சுற்றி வளரும் களைகளை எதிர்த்து நிற்க முடியாமலும், வளர முடியாமலும் வாடி வதங்கி இறந்து போகின்றதோ அதே போல் இவர்களும் உலகப் பற்றினாலும், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்ப்புகளினாலும் கிறிஸ்துவில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை இழந்து போகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவன் இவ்வாறு நடக்க மாட்டான். அவன் இரட்சிப்பை நிச்சயமாகப் பெற்றுக் கொண்டிருப்பதாலும், அவனுள் ஆவியானவர் நிரந்தரமாக இருப்பதாலும் அவனால் கிறிஸ்துவை இழக்க முடியாது. இவ்வாறாக வேதத்தின் மற்ற பகுதிகளோடு இப்பகுதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்பகுதி உண்மையில் எதைப் போதிக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.
வேதத்தைப் படிக்க இவ்விதிகளை நாம் முறையோடு பின்பற்றினால் கர்த்தர் போதிக்கும் சத்தியங்களை நாம் நல்ல முறையில் புரிந்துகொள்ளலாம்.
1 கொரிந்தியர் 12-14 அதிகாரங்கள் ஆவிக்குரிய வரங்களைப்பற்றி எத்தகைய போதனையைத் தருகின்றன என்பதை நாம் ஆராய்வதற்கு முன் வேதத்தின் தன்மையைப் பற்றியும், அதனைப் படிக்கப் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேதம் என்றால் என்னவென்று தெரியாமல் வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ள முயல்வது கல்லில் நாருரிக்க முயல்வது போலாகும். [.......] இயக்கத்தார் நாம் இதுவரை பார்த்தவிதத்தில் வேதத்தை விளக்குவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் வேதம் ஒரு மந்திரவாதியின் கையில் இருக்கும் கோலைப் போலவும், வசிய மருந்தாகவுமே தெரிகிறது. இதனால் அவர்கள் தமது மனம்போன போக்கில் வேதத்தைப் பயன்படுத்தி உலகப்பிரகாரமான ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்கியுள்ளார்கள். சொந்த அனுபவங்களுக்கும், மனக்கிளர்ச்சிகளுக்கும், முட்டாள்தனத்திற்குமே இக்கூட்டத்தாரால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இல்லாவிட்டால் மனிதன் இணையத்தின் (Internet) மூலம் உலகத்தையே தனது வீட்டிற்குள் கொண்டுவந்திருக்கும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆராதனைக் கூட்டங்களில் ஆத்மீக அனுபவம் என்ற பெயரில் நாயைப்போல் குரைக்கவும், குரங்கைப் போல் சத்தமிடவும் முற்படுவானா?
இவ்வாக்கமானது ஆர். பாலா அவர்கள் எழுதிய ஆதி சபையின் அற்புத வரங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியிடு : - சவரின் கிரேஸ் வெளியீடுகள்
போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.
|
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :சீரிய தேச நெருக்கடி - நிலை..
06-05-2013 12:55:13
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
செய்திகள் - உலகம்
Topic :
உலகளாவிய நிலையில் விசுவாசிகள் ஒடுக்கப்படுகிற செய்திகள்
Subject :சீரிய தேச நெருக்கடி - நிலைத்திருப்பதா தப்பியோடுவதா?
‘‘சீரிய தேச நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒவ்வொருவரும் பதற்றமும் தடுமாற்றமும் அடைகின்றனர். அரசாங்கத்தை எதிர்க்கும் பலர், மேலும் அதிகமான சுதந்திரம் வேண்டும் என்று கோருகின்றனர். வேறு சிலரோ இஸ்லாத்தை வற்புறுத்தியும் வன்முறையிலும் திணிக்க விரும்புகின்றனர். பற்றாக் குறைகள் ஒரு ### *** ### ஊழியர் நிலவரத்தைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ‘‘உலக நாடுகளின் பகிஷ்கரிப்பின் விளைவுகளை சீரியா தேசம் முழுவதும் காண முடிகிறது. பெட்ரோல் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பேரங்காடிகளில் பல பொருள்கள் விற்கப்படுவதில்லை. பற்றாக் குறையினால் பொருள்களின் விலைகள் உயர்கின்றன. கேஸோலின் (பெட்ரோல்) வாங்குவதற்காக மக்கள் மணிக் கணக்கில் வரிசை பிடித்து நிற்கின்றனர். ஒவ்வொரு நாளும் மின்சாரத் துண்டிப்பு சில மணி நேரங்களாவது நீடிக்கிறது. மக்கள் அவதிப் படுகின்றனர். தேசம் சீரழிந்து கொண்டிருக்கிறது.” பல கிறிஸ்தவர்கள், நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதாலும், வாழ்க்கை தரம் சீரழிந்து கொண்டிருப்பதாலும், உரிமைகள் மறுக்கப்படுவதாலும் தேசத்தை விட்டுத் தப்பிச் செல்ல திட்டமிடுகின்றனர். ஆர்ப்பாட்டங்கள் தொடங்குவதற்கு முன் கிறிஸ்தவ மக்கள் ஓரளவு பாதுகாப்பை உணர்ந்தனர். அரசாங்கம் வீழ்த்தப்பட்டால், கிறிஸ்தவர்களும் ஏனைய சிறு பான்மையினரும் தங்கள் சுதந்திரத்தை இழந்து போகக் கூடும் என்று அஞ்சுகின்றனர். உள்ளூர் சபைகளின் மூப்பர்களைப் பெலப்படுத்தும் செயல் நடவடிக்கைகளில் ### *** ### இறங்கியுள்ளது. ‘‘கிறிஸ்தவ நூல்களையும் தலைமைத்துவப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். ஈராக்கில் இருந்து தப்பி, சீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள கிறிஸ்தவர்களையும் ஆதரித்து வருகிறோம்”, - இவ்வாறு ### *** ### பணியாளர் ஒருவர் கூறுகிறார். சீரியாவின் உள்நாட்டுப் போரை ஆவிக்குரிய யுத்தமாக சீரிய கிறிஸ்தவர்கள் காண்கின்றனர். எனவே, உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களை, தங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஐக்கியப்பட்டு; உதவிக் கொள்ளும்; தருணமாகவும் காணப்படுகிறது. இது போன்ற காலக் கட்டத்தில் தேவன் உங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறீர்களா? சீரியா தேச சகோதர சகோதரிகளுக்காக குரல் கொடுக்க சித்தமா? அவர்கள் தேவனிடத்தில் கதறி வருகின்றனர். அந்தக் கதறலைக் கேட்க முடிகிறதா? நீங்கள் வழங்கும் சிறு உதவி மிகப் பெரிய காரியத்தையும் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கள் விசுவசாசத்தின் நிமித்தம் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சகோதரர்களுக்காக ஒன்றினைந்து உதவுவோம், வாருங்கள். நெருக்கடியான இந்நேரத்தில் சீரிய தேசத்து சகோதர சகோதரிகளுக்காக நீங்கள் எப்படி உதவ முடியும் என்பதை அறிய, அத்தேசத்தின் அவசர மனுவை வாசியுங்கள். அப்போஸ்தலர் பவுல் பிலிப்பியர் சபைக்கு நன்மதி கூறியது போல, ### *** ### உங்களுக்கும் உரைக்கிறது, எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப் பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன் (பிலிப்.4:18), எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் என்று விசுவாசிக்கிறோம் (நீதி.11:25). |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|
|
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலு..
06-05-2013 11:34:57
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
இஸ்லாம் கிறிஸ்துவ விவாதங்கள்
Topic :
கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (1)
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (8)
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் : சபையின் சக்தி கடைசியாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே கிறிஸ்தவ விசுவாசத்தின் அச்சாணியாகும். சபையின் சரித்திரத்திலும் அதன் வளர்ச்சியிலும் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலேயாகும். இது ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. சபையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் மூலாதாரமாக இருப்பது உயிர்த்தெழுதலின் இரகசியமே. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மனித இரட்சிப்பின் அஸ்திபாரமென்றால். அவரது உயிர்த்தெழுதல் அவரது சபையின் வெற்றி வாகையாயுள்ளது. உயிர்த்தெழுதலில்லாத சிலுவை மரணம் அற்பமும், சிலுவைமரணமில்லாத உயிர்த்தெழுதல் அர்த்தமற்றதுமாக இருக்கிறது. அதேவேளையில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவரது மரணத்தை உறுதிப்படுத்துகிறது. மெய்ப்பிக்கிறது. இயேசு உயிருடனெழுந்த பிற்பாடு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கும், சீஷர்களில் நூற்றுக்கணக்கான பேருக்கும் தரிசனமானார். அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிக்கிறவராகக் காண்பித்தார். சிலுவையிலறையப்பட்ட அதே சரீரம் தான் என்பதற்குரிய அச்சடையாளங்களை ,கைகளில். கால்களில் விலாவிலுள்ள தழும்புகளைக் காண்பித்து, அவர்களது சந்தேகத்தை அறவே நீக்கினார். இவ்வாறு 40 நாட்களாக அவர்களுடன் சஞ்சரித்து, தமது மரணம் அடக்கம், உயிர்த்தெழுதலின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தையும், அதனால் மனுக்குலத்துக்கு ஏற்படும் மாபெரும் விளைவுகளையும் விளக்கிக் கூறினார். தன்னுடைய விரல்களையே இட்டுத் தமது தழும்புகளைப் பார்க்குமாறும், சிலுவையிலறையப்பட்ட இயேசுவே தாம் என்பதனையும் சந்தேகப் பிராணியாக இருந்த தோமா அப்போஸ்தலனுக்கு நிரூபித்துக் காட்டினார். தனது சகாக்களின் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, அதிக துக்கத்தினால் மனம் பேதலித்துத்தான் அப்படிப் பேசுகிறார்களோ என்று அதிசயித்த, ஐயமுற்ற தோமாவிற்கு இந்த அறை கூவலைத் தந்தார். “................ அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டனா காயத்தை நான் கண்டு. அந்தக் காயத்திலே என் விரலையிட்டு. என் கையை அவருடையவிலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்“என்றான் (யோவான் 20:25) அவனுடைய கேள்விக்கு விடை கிடைத்ததைஇவ்வாறு வாசிக்கிறோம். “மறுபடியும் எட்டு நாளைக்குப் பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனே கூட இருந்தான் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று! உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார். உன் கையை நீட்டி என் விலாவிலேபோடு. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்(யோவான் 20:26:27) இப்பகுதி நமக்கு எதனை வெளிப்படுத்துகிறது என்றால் கிறிஸ்துவின் சிலுவை மரணமும் அதனைத் தொடர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலும் அவருடைய சொந்த சீஷர்களாலேயே, மெய்யடியார்களாலேயே விஞ்ஞானரீதியில் ஆராய்ந்தறியப்பட்டது என்பதனையே போதுமான நிரூபணம் இன்றி அவர்களில் எவரும் எதையும் நம்பத் தயாராயில்லை இங்ஙனமிருக்க, இயேசுவின் முடிவையும், உயிர்த்தெழுதலையும், எவ்வளவு சுலபமாக, ஆதாரம் எதுவுமில்லாமல் நிராகரிக்கவும் பழித்துப்பேசவும், அலட்சியப்படுத்தவும் கடவுள் பக்தியுள்ள மக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் முற்படுகிறார்கள்
இது புதிதாகப் புனையப்பட்டதுமல்ல புதிய கண்டுபிடிப்புமல்ல. சுவிசேஷ நூல்களின் உண்மைத் தத்துவத்தையே உறுதிப்படுத்துகிறது.
சிலுவை மரணத்துக்கு வேதாகமக் காரணங்கள் நமது விசுவாசத்துக்குக் காரணம், நியாயம் என்ன என்பதை உறுதிப்படுத்துவதற்கும். நிரூபிப்பதற்கும் நாம் நமது பரிசுத்த வேதாகமத்தைக் கவனித்து, ஒத்துப் பார்க்க வேண்டிய கடமை. உத்தரவாதம் கிறிஸ்தவர்களாகிய நம்மீது சுமருகிறது. வரலாற்று ஏடுகள், புதைபொருள் ஆராய்ச்சி ஆகிய இவ்விரண்டுமே வேதபுத்தகத்தின் உரிமைகளை ஆதரிக்கின்றன. நமது வேதத்தில் எழுதப்பட்டிருப்பவைகளை மட்டும் உண்மையயன்று ஏற்றுக்கொள்ள மறுக்கும் எந்த ஒரு நாத்திகனுக்கும், பகுத்தறிவு வாதிக்கும், முஸ்லீமுக்கும் இந்த ஆதாரபூர்வமான, மறுக்க முடியாத சரித்திர மற்றும் புதைபொருள் ஆய்வின் முடிவுகள் போதுமான சான்றுகளாகும். இப்பொழுது இன்னும் சில வேதாகம சத்தியங்களைப் பார்ப்போமாக.
பிராயச்சித்தம் பிராயச்சித்தம் என்ற கருத்து கிறிஸ்தவத்துக்குரிய புதுமையான எண்ணம் அல்ல. பழமையான சிந்தனையே அஞ்ஞானிகளின் மத்தியிலும் இது ஒரு மனிதாபிமானக் கொள்கையாகவும், பழக்கவழக்கமாகவும் இருந்து வந்திருக்கிறது. பழைய ஏற்பாட்டு முறைமையின்படி, ஆதாம் ஏவாளின் வீழ்ச்சிக்குப் பிறகு பாவநிவாரணமாகப் பலிசெலுத்தும் நியமனம் தேவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதாமும் ஏவாளும் தங்கள் பாவத்தை அறிக்கை செய்து தேவனுடைய கற்பனையைத் தாங்கள் மீறி விட்டோம் என்று உணர்த்தப்பட்ட பிற்பாடு. தேவனே ஒரு மிருகத்தின் இரத்தத்தைச் சிந்தவிட்டு, அதன் தோலினால் அவர்களிருவருடைய நிர்வாணத்தை மூடினார். (ஆதி 3:20)எழுத்து அர்த்தத்தின்படி பிராயச்சித்தம் (Atonement) என்றால் “மூடுதல்” அல்லது “மறைத்தல்” என்று பொருளாகும். தேவனுடைய நீதிநெறியின்படி நடக்கத் தவறின மனிதனுக்கு தேவன் செய்த பரிகாரம் அல்லது பிராயச்சித்தமாக இருக்கிறபடியால், இந்த நியமனம் முழுவதுமே தேவனிடமிருந்தே தோன்றினது. மற்ற மதங்களின் சடங்காச்சாரங்களிலும். ஆராதனைகளிலும் இந்த முறைவெளிப்படையாய்க் காணப்படுகிறது. ஆபேலும், காயீனும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வந்தார்கள். ஆபேலையும் அவன் காணிக்கையையும் தேவன் அங்கீகரித்தார். ஏனென்றால் தனது மந்தையின் தலையீற்றுகளில் சிலவற்றைக் கொண்டு வந்து, இரத்தம் சிந்திபலி செலுத்தினான். ஆனால் காயீனோ தன் கையின் கிரியைகளால், இரத்தமின்றி காணிக்கை படைத்தான், தேவனோ அவனையும் அவன் காணிக்கையையும் நிராகரித்தார். அங்ஙனமே நோவா ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு எல்லாரும் தேவ நியமனத்தின்படியே மிருக பலிசெலுத்தினார்கள். பின்னர் மோசேயின் காலத்தில் இந்தப் பலிமுறைகளெல்லாம் நெறிப்படுத்தப்பட்டு நியாயப்பிரமாணப் புத்தகத்தில் கோர்வையாக எழுதப்பட்டன. இந்தப் பலிகள் எல்லாம் கடைசியாக வரப்போகின்ற நித்தியமான, உன்னதமான உண்மையான கிறிஸ்துவின் சிலுவைமரணத்துக்கு அடையாளங்களாகவும், நிழலாட்டமாகவும் இருக்கின்றன. அவை எல்லாம் நிழலேயன்றி நிஜமல்ல. சடங்காச்சாரமேயன்றி சத்துவமுள்ளவையல்ல என்பதனை வேதசாஸ்திரிகள் அனைவரும் ஏகமனதாக விளக்கிக்கூறியுள்ளார்கள். இந்தப் பழைய ஏற்பாட்டுப் பழக்கவழக்கங்களையும், பலி முறைகளையும் தொழுகை முறைகளையும் பிற மதத்தினர்கள் கையாண்டு, தங்கள் விக்கிரக தெய்வங்களுக்குப் படைத்துள்ளனர். அவர்கள் மெய்நோக்கத்தை அறியமாட்டாதவர்களாகையால். உயிரினப்பலிகளையே பாவமன்னிப்புக் கென்றும். தெய்வங்களைச் சாந்தி செய்வதற்காகவும் பலியிடத் துவங்கினர். நற்கிரியைகளும், புண்ணியங்களும் புனிதயாத்திரையுமே பாவமன்னிப்பிற்கான பிராயச்சித்தம் ஆகும் என்று இஸ்லாம் போதிக்கிறது. தானதர்மங்களும் நற்கிரியைகளும், பாவங்களையும், துர்க்கிரியைகளையும் அழித்துவிடுகின்றன. அத்துடன் ஐந்து தூண்களான கர்மங்களை நிறைவேற்றுதலும். அல்லாஹ் நாமத்தில் போரிடுவதும், குர்-ஆனைப் பாராயணம் பண்ணுதலும் பாவமன்னிப்பைச் சம்பாதிக்கின்றன என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர். (இஸ்கந்தர் ஜதீதின் பாவநிவாரணம் இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் என்ற நூலில் 33-41பக்கங்களைப் பார்க்க) இந்த ஆய்வினை முடிப்பதற்கு முன்பாக, ‘பணயம்’ அல்லது மீட்பின் கிரயம் என்ற கருத்தைப் பற்றி இஸ்லாமும் குறிப்பிடுவதால், அதனையும் பார்ப்பது நல்லது. ஆபிரகாமும் அவனது குமாரனைப் பலியிடப் பூரணமாகச் சம்மதித்ததுமான சந்தர்ப்பத்தைக் கூறும்பொழுது சூரா அல்-ஸஃபத் 37:107 இல் இறைவாக்கு இவ்வாறு குறிப்பிடுகிறது. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். நாஸிர் அல்-தீன் அல்-பைதவி தமது நூலில், இவ்வாறு விளக்குகிறார். அவனுக்குப் பதிலாகப் பலியிடப்பட்டது எதுவோ, அந்தக் கிரியையினால் அது நிறைவடைந்தது.
அல்ராசியும் ஒரு பாரம்பரியத்தின் மூலமாக இவ்வாறு விளக்குகிறார்; ஸூத்தி உரைப்பதாவது. ஆபிரகாம் வெளியே அழைக்கப்பட்டார் ஆபிரகாம் சுற்றும் முற்றும் பார்த்த பொழுது கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு செம்மறிக் கடாமலையிலிருந்து இறங்கி வருகிறதைப் பார்த்தார். அதனைப் பிடித்து தமது மகனருகில் கொண்டு சென்று, மகனை விடுவித்து விட்டு செம்மறிக்கடாவைப் பலியிட்டார். என் மகனே, இன்றைக்கு நீ ஒரு பெரிய ஈவாக எனக்கு அருளப்பட்டிருக்கிறாய். அந்த ஆடு எதிர்பாராத வரப்பிரசாதமாகவும், தனது மகனுக்கு ஈடாக இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதென்றும் பாராட்டினார். எவ்வாறு அவருடைய குமாரன் ஆபிரகாமுக்கு ஒரு ஈவாகக் கொடுக்கப்பட்டான்? ஆபிரகாமின் குமாரனுக்குப் பதிலாக அல்லது ஈடாக வெள்ளையும் கருப்புமான செம்மறி கொல்லப்பட்டதினாலேயே, ஆடு மகனுக்குப் பலியாக அமைந்தது. இவ்வாறு அவன் மறுஜீவன் அல்லது வாழ்வு பெற்றான். அந்தச் செம்மறிக்கடாவும் மதிப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தது ஏனென்றால் முதலாவதாக, தேவனே இதனை ஆயத்தம் செய்தார்: இரண்டாவதாக. அது சர்வலோகத்தின் மீட்பராக வெளிப்பட்டு அனைத்து மனித வர்க்கத்தின் பாவ மன்னிப்புக்காக இரட்சிப்புக்காக, கடைசியும் முடிவானதுமான பெரிய பலியாகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுக்கப் போகிற கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருந்தது.அவரைச் சுட்டிக் காண்பித்துத்தான். “இதோ உலகத்தின்பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”(யோவான் 1:29) என்று யோவான் ஸ்நானகன் கூறினான். “இஹியா உலுமுத்தீன் அல்தின்” என்ற தமதுநூலில் முதல் புத்தகம் 243ம் பக்கத்தில் அபூஹமத் அல்கசாலி என்ற மிகப் பெரிய இறையியல் வல்லுநர் இவ்வாறு கூறுகிறார். “ஒரு பலியிடுவது இறைவனுக்கு நெருக்கமாக வருவதற்குரிய ஒரு மார்க்கமாகும். அதாவது கீழ்ப்படிதலின் வழியாகும் ஏனெனில், பலி எவ்வளவுக்கெவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அதன் உடற்பகுதிகள் எவ்வளவு அதிகமாயிருக்கிறதோ. அந்த அளவிற்கு நீ நிச்சயமாக நரகத்தில் இருந்து மீட்கப்படுவாய் என்ற வாக்குத்தத்தம் உண்டாயிருக்கிறதென்று நீ அறிய வேண்டும். அதே நூலில் மேலும் அல்-கசால் முஸ்லீம்கள் ஒருமிருகத்தைப் பலியிடுவதினாலே கடவுள் தமக்கருகிலிருப்பதை உணரலாம் என்று கூறுகின்றார் “ஒரு மிருகத்தைப் பலியிடுவதினாலே அல்லாஹ் மிகவும் அருகிலிருப்பதை உணருங்கள். உருவத்தில் பெரியதும். பலத்ததுமான மிருகத்தையே பலிக்கெனத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று நபிகள் வலியுறுத்திக் கூறியுள்ளார். பலி செலுத்தும் நாளிலே மனிதருடைய நடவடிக்கைகள் யாவற்றிலும் இறைவன் உள்ளத்துக்கு அதிக அருமையானது. உவப்பையளிப்பது மிருகபலியே. உயிர்த்தெழுதலின் நாளிலே அந்த மிருகமும் தனது குளம்புகளோடும், கொம்புகளோடும் தோன்றி தனது இரத்தத்தைச் சிந்த விடும்பொழுது, அது தரையில் விழுவதற்கு முன்பாக இறைவனருகில் விழும். ஆதலால் பலியினால் உங்கள் ஆத்துமாக்களைச் சுத்திகரியுங்கள். ஹதீத் எனும் நபிகளின் பாரம்பரியத் தொகுப்பில் பலி மிருகத்தின் ஒவ்வொரு ரோமத்துக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் மதிப்பு இருப்பதால், வெகுமதி உண்டு. அது இறைவன் முன்னிலையில் நிறுத்துப் பார்க்கப்படும். என்ற குறிப்பு காணப்படுகிறது. சிறந்ததொரு மிருகத்தைப் பலியிடுங்கள் ஏனெனில்அதுவே உங்களை உயிர்த்தெழுதலின் நாளுக்குச் சுமந்து வரும்(ஆதாரம் கசீலின் நூல் பக்கங்கள் 250-251) என்று நபிகள் கூறியுள்ளார். (வளரும்) |
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :Re:ஜெப வழிகாட்டி - மே 2013..
04-05-2013 09:29:16
|
|
|
|
|
|
|
Subject :Re:தனியாக இருப்பவருக்கு சி..
03-05-2013 15:55:07
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
கட்டுரைகள்
Topic :
தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள்
Subject :Re:தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள்
ஆன்மீகக் கண்ணோட்டத்தில், மனிதர்களின் பாலுணர்வு தொடர்பான கட்டுரையைத் தமிழில் படிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி நண்பர் கொல்வின் அவர்களே.... தொடர்ந்து எழுதுங்கள். |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|
|
Subject :Re:தனியாக இருப்பவருக்கு சி..
03-05-2013 13:05:04
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
கட்டுரைகள்
Topic :
தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள்
Subject :Re:தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள் (2)
பால் தன்மை தேவனுடைய கொடை என்பதால், அவர்கள் பாலியல் திருப்திக்காக ஆவலுடனிருந்து, தேவன் தமக்கு அதனைத் தரச் சித்தம் கொள்ளவில்லை என்று எண்ணியபடி சந்தோஷமாகவும் பரிசுத்தமாகவும் இருக்கலாம். எனவே அவர்கள் இரணடாந்தரமானவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருமணத்திற்கு முன்பதாக பாலுறவு கிடையாது. திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபட விரும்பும் ஆண் நண்பனின் அழுத்தத்திறகு இடங்கொடுக்க கூடாது. என்னை முழுமையான அன்பு செய்யாத மதிப்பளிக்காத, எனக்கு முழு வாழக்கைக்கெனப் பொருத்தனை கொடுக்க முடியாத ஒருவனுக்கு என்னுடைய உடலை விளையாட்டுப் பொருளாகத் தர மாட்டேன்.காதலன்பானது முழு வாழ்க்கைக்குமான அழகான கொடை என்பதால் திருமண நோக்கமில்லாத எதேச்சையான காதலுறவுக்கு இடமில்லை.
நான் ஐக்கிய அமெரிக்காவில் இறையியல் பயின்றபோது எனது விடுதியில் திருமணமாகாத நான்கு ஆசிய மாணவர்கள் இருந்தார்கள். வெள்ளிக்கிழமை பின்நேரங்களில் அமெரிக்க மாணவர்கள் அனைவரும் தங்களது பெண் நண்பிகளைச் சந்திக்கும் Date என்று சொல்லப்படும் சந்திப்புக்குப் போவதால் எமது விடுதிகள் வெறிச்சோடிப் போய்விடும். (மேற்கதையை கலாச்சாரத்தில் காணப்படும் திருமணத்திட்டம் இல்லாமல் ஒரு சந்திப்பைத் தொடரும் முறைமையை வேதாகமத்தில் காணப்படும் மிகவும் உன்னதமான, வாழ்நாள் முழுவதும் பொருத்தனை பண்ணுகின்ற காதலன்புடன் தொடர்புபடுத்த நான் மிகவும் சிரமப்படுகிறேன் என்பதை நான் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மேற்கதைய செய்தி நிறுவனங்களின் தாக்கத்தால் இந்த முறைமை ஆசிய நாடுகளுக்கும் பரவுவது எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது.) வெள்ளிக்கிழமைகளில் ஆசிய நாட்டவர்களாகிய நாங்கள் நால்வரும் நமக்கொரு மனைவி வேண்டுமென ஆதங்கத்துடன் சொல்வதுண்டு. இது தேவன் மனிதர்களுக்கு வைத்திருக்கும் சாதாரண ஒழுங்குமுறையான காதல் மற்றும் பாலியல் திருப்திக்கான பரிசுத்த அவாவின் ஒரு பகுதியாகும். இருப்பினும், தேவன் என்னை தனியாறிருக்க அழைத்திருந்தால், நான் ஒரு வகையான முழுமையற்ற உணர்வுடன் மரிக்கும்வரை வாழவேண்டும் என நான் அறிவேன். ஆனாலும், நான் சங்கீதம் 138:8 இல் தரப்பட்டுள்ள சத்தியத்தில் அமைதலாயிருந்தேன். “கர்த்தர் என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; கர்த்தாவே உமது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கின்றது”
தலைசிறந்த கிறிஸ்தவ கவிஞராகிய வெனி ஜே.குறோஸ்பி (எனது 28 கிறிஸ்தவ தலைவர்களின் படங்களில் அவருடையதும் ஒன்று) பிறந்த ஆறு கிழமைகளிலிருந்தே பார்வையற்றவராக இருந்தார். சாதாரண தடிமன் நிமித்தம் கண்ணில் ஏற்பட்ட அழற்ச்சியை குணமாக்க முயன்ற வேளையில் ஏற்பட்ட தவறின் காரணமாக அவருடைய பார்வை இல்லாமல் போனது. அவரது கீதங்களில் அவர் பரிசுத்த அவாவை வெளிப்படுத்தி, பரலோகத்தின் அதிசயத்தையும், அதன் முன்சுவையையும் குறிப்பிட்டுள்ளார். அவரது கீதங்களில் மிகவும் பிரபல்யமானது ‘Blessed Assurance, Jesus is mine’ என்பதாகும். “தேவன் உங்களுக்கு பார்வையைக் கொடாத்து துரதிஷ்டமே” என்று ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த போதகர் ஒருவர் அவரிடம் கூறியிருந்தார். ஆனால் அவரோ, “நான் பிறக்கும்போது எனக்கு தெரிந்தெடுக்கும் விருப்பம் தரப்பட்டிருந்தால் நான் பார்வையற்றவனாகவே இருக்க விரும்பியிருப்பேன். ஏனெனில் நான் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் நான் காணும் முதல் முகம் எனக்காக உயிர் துறந்தவரின் முகமாய் இருக்கும்“ என்று கூறி போதகரை வியப்பில் ஆழ்த்தினார். இதுதான் பரிசுத்த அவா.
குறொஸ்பி பார்வையற்ற ஒரு இசைக்கலைஞரை திருமணம் செய்திருந்தார் ஆனால் அவர்களது ஒரே பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போனது. அப்போது தவறுதலாக தன் கண்ணைக் குருடாக்கியவரைக் குறித்து அவர் இப்படியாகச் சொன்னார். “எண்பத்தைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் ஒரு தடவைக் கூட அவரைக் குறித்து மனங் கசந்ததே கிடையாது. ஏனெனில் எனது வாலிப்பிரயாயத்தின் பிற்பாடு நல்ல தேவன் தனது முடிவில்லா கருணையின் நிமித்தமாய், நான் இப்பொழுதும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியத்திற்கென என்னைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார்.” அவரது பாடல்கள் தேவன் தொடர்பான மகிழ்ச்சியை வெளிக் கொணர்பவையாகவே உள்ளன.
வெனி குறொஸ்பியின் குணவியல்பு சகல கிறிஸ்தவர்களிடமும் காணப்படும் குணாதிசயமாய் இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் திருமணமானவர்களாயினும், தனிமையானவர்களாயினும் பாலியல் ரீதியில் பரிசுத்தமானவர்களாயும், சந்தோஷமாயும் இருக்கக் கூடும். இது தேவன் பால் கொண்டுள்ள ஆழ்ந்த திருப்தியுடன் தேவன் எமக்கென திட்டமிட்டிருக்கும் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருக்கும் அவாவுடன் கலந்த ஒரு குணவியல்பாகும். தனிமையாயிருப்பவர்கள் தாம் திருமணமாக விரும்பி தம்மைக் கைவிட்டுவிட்டவர்களைக் குறித்து கசப்புணர்வு அற்றவர்களாயிருக்க வேண்டும். தேவன் இதனை அனுமதித்திருந்தால் அவர் நிச்சியமாக அவர்களுக்கு மற்றுமொரு சந்தோஷமான ஆசீர்வாதமான திட்டத்தை வைத்திருப்பார். தேவன்பால் கொண்டுள்ள இந்த சந்தோஷமும் திருப்தியும் தேவனுக்கு விருப்பமில்லாத காரியங்கள் மூலம் எமது நிறைவைப் பெற்றுக் கொள்ளும்படி எமக்கு ஏற்படும் சோதனையை மேற்கொள்ள எமக்கு உதவும்.
தனிமையாயிருப்பவர்கள் தொடர்பாக சபையின் பொறுப்புக்கள்
தனிமையாயிருப்பவர்களுக்குரிய சில தேவைகளைச் சந்திக்க சபையானது கருத்துடையதாயிருக்க வேண்டும்.
- தேவனுடைய திட்டத்தில் தனிமையாயிருப்பவர்கள் ஆற்றும் பங்களிப்பைக் குறித்தும், கிறிஸ்துவின் நிமித்தம் அவர்கள் ஆற்ற வேண்டிய பிரத்தியேக பங்களிப்பைக் குறித்தும் சபையானது தனது அங்கத்தவர்கள் முன் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். கூடுமான வரையில் தனிமையில் இருப்பவர்களின் மனதைத் துன்புறுத்த்த்தக்கதான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொள்ளும்படி கூடுமான வழியிலெலாம் முயற்சி எடுக்க வேண்டும்.
- தனிமையாயிருப்பவர்கள் சுகவீனமுற்றிருக்கும்போது அல்லது உணர்வு ரீதியாகவோ, சரீர ரீதியாகவோ ஒரு தேவையில் இருக்கும்போது, அதன்பின் பராமரிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு வீடு உள்ளது என்பதனை அவர்கள் உணர வேண்டும். சுகவீனமுற்றிருக்கும், உணர்வு ரீதியாக அழுத்தத்திற்குள்ளாயிருக்கும், அல்லது தனிமையாயிருக்கும் பெண்களை என்னுடைய மனைவி எனது வீட்டில் அடிக்கடி தங்க வைப்பதுண்டு.
- தனிமையாயிருக்கும் பெண்கள் ஆண்களின் பிரசன்னம் தேவைப்படும் சில சந்தர்ப்பங்களில் தமக்கு உதவி செய்ய ஆண்கள் உள்ளனர் என்பதனை அறிந்திருக்க வேண்டும். அதேபோல் தனிமையாயிருக்கும் ஆண்கள் குறிப்பாக அவர்களது பெற்றோர் அருகில் இல்லையெனில், ஆரோக்கியமான தாய்மையுறவை உணர வேண்டும்
- தனிமையாயிருப்பவர்களுக்கு சிறந்த நண்பர்களும் நண்பிகளும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் இப்படியான நட்புறவுகளினூடாக வரும் செழிப்பை அவர்கள் அனுபவிக்கக் கூடும். மேற்கத்தைய நாடுகளிலுள்ள அநேக சபைகள் தனிமையாயிருப்பவர் களுக்கென விசேஷித்த ஊழியங்களை ஆரம்பித்துள்ளன. இது ஒரு உற்சாகமான முன்னேற்றமாகும். இருப்பினும், திருமாணமானவர் களுடன் சந்தோஷமான, பரிசுத்தமான, உதவி செய்கின்ற நட்புறவுகளை தனிமையாயிருப்பவர்கள் வைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை இது எடுத்துப் போட மாட்டாது.
|
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :ஜெப வழிகாட்டி - மே 2013..
03-05-2013 00:44:55
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
ஜெபகுறிப்புகள்
Topic :
ஜெப வழிகாட்டி - மே 2013
ஜெப வழிகாட்டி - மே 2013 புதன் 1 | கொமொரோஸ் விசுவாசம் இல்லாத வாழ்க்கைத் துணைகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இதன் வழி அவர்களும் குடும்பமாக தேவனை ஆராதிப்பார்களாக. செவ்வாய் 2 | கொமொரோஸ் இளையோர்கள் தேவ வாக்கைக் கேள்விப்பட்டு அவருடைய இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வர வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளி 3 | தான்ஷானியா இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் சமுதாய நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் அரசாங்கம் வெற்றியடைவதற்காக வேண்டிக் கொள்ளுங்கள். இத்தீவில் கிறிஸ்தவர்களை ஒடுக்கும் முயற்சிககளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் பணிகளுக்கு சபைகளும் ஒத்துழைக்க வேண்டிக் கொள்ளுங்கள். சனி 4 | கென்யா புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், அமைச்சர்கள், செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத் தலைவர்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். இது ஒரு புதிய ஆட்சி முறை என்பதால், அனைத்துத் தலைவர்களின் விவேகத்திற்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். புதிய ஆட்சி முறை தேசத்தை வளப்பத்திற்குள்ளும் சமாதானத்திற்குள்ளும் வழிநடத்திச் செல்ல விண்ணப்பியுங்கள். ஞாயிறு 5 | கென்யா அல்-ஷபாப் அரக்கர்களுக்கு எதிரான யுத்தம் வெற்றி பெற வேண்டிக் கொள்ளுங்கள். இவர்கள் கென்யா எல்லைப் பகுதிகளில் ஆக்கிரமித்து வருகிறார்கள். சமீபத்திய கையெறி குண்டு தாக்குதல், கிறிஸ்தவர்களுக்கு அச்சத்தையும் ஆலயத்திற்குச் செல்லும் பீதியையும் கிளப்பாதபடி வேண்டிக் கொள்ளுங்கள். திங்கள் 6 | எத்தியோப்பியா தென் மேற்குப் பகுதியில் உள்ள ஜிம்மாவில் வாழும் இஸ்லாமிய பின்னணி விசுவாசியின் வீடு எரியூட்டப்பட்டதோடு, அவருடைய பயிர் விளைச்சல்களும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தேவன் இவர்களைக் காப்பதோடு, ஊக்கத்தையும் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். செவ்வாய் 7 | சொமாலியா முழுமையான சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டிக் கொள்ளுங்கள். இதன் வழி சொமாலியாவில் தேவ வாக்கு, சீடத்துவ வாய்ப்புகள், ஐக்கியம் மூலம் ஆவிக்குரிய வளர்ச்சி காணப்பட ஜெபியுங்கள். புதன் 8 | நைஜீரியா பொக்கோ ஹராமின் தீவிர நடவடிக்கைகளால் சமூக பொருளாதார நடவடிக்கைகளில் சுணக்கம் மக்களின் கவலையை ஏற்படுத்துகிறது. இவர்களின் நடவடிக்கைகளால் கிறிஸ்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது என்று சபை மூப்பர்கள் கூறுகிறார்கள். !@#$ %* மேற்கொள்ளும் முயற்சிகள் இவர்கள் விவேகமாக செயல்படுவதற்கு வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். வியாழன் 9 | நைஜர் புற நகர்ப் பகுதிகளில் சிறு வியாபாரம் மூலம் விசுவாசி அல்லாதோர் மத்தியில் சுவிசேஷம் பகிர்ந்து கொள்ளும் ஊழியர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவன் அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பதோடு, தங்கள் பணிகளில் முழு ஈடுபாட்டைக் காட்ட வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளி 10 | நைஜர் மேற்கு ஆப்ரிக்கப் பிராந்தியத்தில் தலை விரித்தாடும் இஸ்லாமியத் தீவிரவாதங்களால், முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தின் நிமித்தம் வெளிப்படையான மருட்டல்களைச் சந்திக்கின்றனர். தேவன் விசுவாசிகளைக் காத்து, அவர்கள் ஜீவியத்திற்கும் ஊழியங்களுக்கும் பெலன் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். சனி 11 | எரித்திரியா இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இவ்வாண்டு மட்டும் 125 விசுவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக !@#$ $%குத் தகவல் கிடைத்துள்ளது. தாங்கள் இரட்சிக்கப்படும் விசுவாசத்திற்குள் இந்த அரசாங்கம் வரவேண்டும் என்று தொடர்ந்து ஜெபியுங்கள். ஞாயிறு 12 | எரித்திரியா விசுவாசத்தின் நிமித்தம் கணவன்மார்கள் கைது செய்யப்படுவதின் நிமித்தம், வருமானம் தேடும் கட்டாயத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிற மனைவிமார்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். தேவன் அவர்களுக்கு ஞானத்தையும் பெலத்தையும், குடும்பத்தைக் காப்பாற்ற ஆக்கப்பூர்வ வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். திங்கள் 13 | மாலி மாலியில் செயல்படும் சபைகளுக்கு ஊக்கமான ஜெபம் தேவைப்படுகிறது. இஸ்லாமியர்களின் அழுத்தமான கோரிக்கைகளைச் சமாளிப்பதில் அரசாங்கம் தோல்வி காண்கிறது. அதிகாரிகள் நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட, தேவன் அவர்களுக்கு கிருபை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். செவ்வாய் 14 | மாலி பாமாகோ பகுதியில் வாழும் கிறிஸ்தவ விசுவாசிகள் படு மோசமான நிலைமைகளைக் கடந்து செல்கின்றனர். சில கிறிஸ்தவர்கள் திம்புக்து மற்றும் காவோ பகுதியில் தனிமையில் விடப்பட்டுள்ளதாக !@#$ %* அறிகிறது. தேவன் பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்களின் சிரமங்களைச் சந்தித்து ஊழியம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். புதன் 15 | வட சூடான் ஷாரியா என்ற இஸ்லாமிய சட்ட திட்டத்தை அமல் படுத்தும் முயற்சியில் பிரதமர் ஓமார் அல்-பாஷிர் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களில் பல சமூக இயக்கங்களும் சபைகளும் முடக்கப்பட்டுள்ளன. இக்காலக் கட்டத்தில் தேசிய விவேகப் படையும் பாதுகாப்புத் துறையும் நூற்றுக் கணக்கான அயல் நாட்டவர்களை, கிறிஸ்தவப் பணியாளர்கள் என்று சந்தேகித்து, நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்காகவும், கட்டாயத்தின் நிமித்தம் நாடு திரும்பும் ஊழியர்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். வியாழன் 16 | வட சூடான் ‘சவால்கள் மத்தியில் ஊன்றி நிற்றல்’ (STSS) என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு திருச்சபையினர் பெலப்பட்டு, ஊக்கமும் அடைந்து, தங்கள் திருப்பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளி 17 | உகாண்டா சவால்கள், மிரட்டல்கள் மத்தியிலும் இஸ்லாமிய பெரும்பான்மைப் பகுதிகளில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து வரும் விசுவாசிகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். சனி 18 | உகாண்டா பிரான்சிஸ் சாமுக்குபாலோ கொலை வழக்கில் நீதி பேணப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். புதிய சந்தேகப் பேர்விளிகள் கைது செய்யப்பட்டதன் தொடர்பில் அந்த வழக்கு மறு விசாரணைக்கு வந்துள்ளது. அவருடைய துணைவியார் ஐரினுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஞாயிறு 19 | உகாண்டா கடுமையான மன அதிர்ச்சிக்கு ஆளான சுஷான் இத்துங்கு (வயது 16) என்ற இஸ்லாமிய பின்னணி விசுவாசிக்காக வேண்டிக் கொள்ளுங்கள். தொடர் மன சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறார். விசுவாசத்தில் அவர் தொடர்ந்து துரிதமாக வளர்ச்சியடைகிறார். விசுவாசத்தின் நிமித்தம் தன் சொந்த தந்தையால், ஆறு மாத கால பட்டினி போடப்பட்டாலும், இப்போது தற்போது சுகமடைந்து வருவதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம். திங்கள் 20 | வியட்நாம் வரும் மே மாதத்தில், குடிசை சபைகள் சிறுவர்களுக்கான கோடை கால முகாம்களின் ஆயத்தத்தில் ஈடுபடும். தேவனின் ஒத்தாசையும் அடைக்கலமும் கிடைத்து, இந்த ஏற்பாடுகளின் அனுமதியானது அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட வேண்டிக் கொள்ளுங்கள். செவ்வாய் 21 | வியட்நாம் இவ்வாண்டில் !@#$ %* முதன் முறையாக, வியட்நாமிய புராண கிராமங்களில் வசிக்கும் கிறிஸ்தவ சிறுவர்களுக்காக விடுமுறை கால வேத ஆராய்ச்சி முகாமை நடத்தவுள்ளது. சுமார் 1700 சிறுவர்கள் இம்முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டின் பின்னணியில் செயல்படும் தரப்பினர்களுக்கு ஞானம், பெலன், நல்லாரோக்கியம் கிட்டுவதோடு, பயிற்சி காலத்தில் நல்ல சீதோஷ்ண நிலையும் உண்டாக வேண்டிக் கொள்ளுங்கள். புதன் 22 | வியட்நாம் !@#$ %* அவ்வப்போது நடத்தி வரும் பல்வேறு செய்ல திட்டங்களால் ஆயிரக் கணக்கான வியட்நாமிய குடிசை சபைகளின் பிள்ளைகள் பயனடைந்து வருகின்றனர். தேவ வாக்கையும் இயேசுவானவரின் ஜீவியத்தையும் கற்றுக் கொள்வது இவர்களின் சிறப்பம்சமாகும். தேவன் இந்தத் திட்டங்களை குறிப்பாக மத்திய மலைப் பகுதிகளிலும் வட பகுதியிலும் ஆதாயப்படுத்தித் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். வியாழன் 23 | வட கொரியா நம்மோடு இரகசியமாக தொடர்பு வைத்திருப்பவர்களுக்கும் சந்திப்பவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். சமீபத்தில், இரகசியமாக பயிற்சி பெற்ற இரண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். வெள்ளி 24 | வட கொரியா பாடுபடும் விசுவாசிகளுக்கு மேலும் அதிகமான உணவுகள், மருந்துகள், இதர உதவிப் பொருள்களை !@#$ %* அனுப்பி வைக்க வேண்டிக் கொள்ளுங்கள். இந்த உதவிப் பொருள்கள், வட கொரிய விசுவாசிகளின் மனோ வலிமைக்கு ஆதாரமகாத் திகழ வேண்டிக் கொள்ளுங்கள். சனி 25 | வட கொரியா சிறையிலும் கொத்தடிமை முகாமிலும் வாடும் கிறிஸ்தவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள். கடுமையான சித்திரவதைகளின் நிமித்தம் அவர்களில் பலர் சரீரத்தாலும் மனதாலும் சிதைந்து, செயல்பட முடியாமல் இருக்கின்றனர். ஞாயிறு 26 | சீனா ஊழியப் பங்காளிகளுடனான ஒத்துழைப்போடு, சீன மொழி பேசும் இஸ்லாமியப் பின்னணி விசுவாசிகளுக்கு புதிய சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் சுமூகமாக இயங்குவதோடு, இஸ்லாமியப் பின்னணி விசுவாசிகள் இந்த வாய்ப்புகளை ஆதாயப்படுத்திக் கொள்ளவும் வேண்டிக் கொள்ளுங்கள். திங்கள் 27 | சீனா சபை நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம், நிதி நிர்வாகம் ஆகீய பயிற்சிகளுக்காக திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன. ஒடுக்கப்படுகிற விசுவாசிகளுக்கு உதவி வழங்கும் வாஞ்சையுடைய தலைவர்களை தேவன் எழுப்பவும், சபைகளுக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டவும் வேண்டிக் கொள்ளுங்கள். செவ்வாய் 28 | புருணை தண்டிக்கப்படுவதற்கு அஞ்சு, இஸ்லாமியப் பின்னணி விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை இரகசியமாகப் பாதுகாக்கிறார்கள். இந்நிலைமையிலும், இல்லங்களில் நடத்தப்படும சிறு சிறு கிறிஸ்தவக் கூட்டங்களில் இரகசியமாகக் கலந்து கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் விசுவாசத்தில் கணம் பண்ணவும் பாதுகாப்பு கிட்டவும் வேண்டிக் கொள்ளுங்கள். புதன் 29 | புருணை சிறு எண்ணிக்கையிலான இரகசியமான ஊழியர்களின் அர்ப்பணிப்புக்காக தேவனை ஸ்தோத்தரிப்போம். அவர்களுக்குள் சந்திப்பு நடத்துவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால், அடிக்கடி சந்திப்பதில்லை. தேவன் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவும் எச்சரிக்கையாக செயல்படுவதற்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். வியாழன் 30 | இந்தோனீசியா அதிகாரிகள், ஆலயங்களைப் பதிவு செய்வதற்கும், ஆராதனை அனுமதிக்கும் ஓயாமல் எதிர்ப்புகளையும் அழுத்தங்களையும் தந்த வண்ணம் உள்ளனர். இந்தோனீசியா முழுவதும் செயல்படும் சபைகளின் இந்நிலைமைகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளி 31 | இந்தோனீசியா ஆமிர் (புனைப் பெயர்) என்ற ஆச்சே இஸ்லாமியப் பின்னணி விசுவாசி, கொலை மிரட்டல் நிமித்தம் நாடோடியாக ஜீவித்து வருகிறார். அவருக்குச் சொந்தமான விசுவாச உபதேசக் கருவூலங்களை ஓர் ஆசாமி திருடியதன் விளைவாக அவருக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் ஊக்கம் கிட்ட வேண்டிக் கொள்ளுங்கள். கட்டுப்படுத்தப்பட்ட ஷாரியா பாணியிலான சட்ட திட்டங்களால் அடக்கப்படும் இதர இரகசிய விசுவாசிகளுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|
|
Subject :தனியாக இருப்பவருக்கு சில ..
26-04-2013 14:30:51
|
|
|
| colvin |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,109
Location: Colombo |
|
|
|
|
Forum :
கட்டுரைகள்
Topic :
தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள்
Subject :தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள்
நாம் இதுவரை குறிப்பிட்ட காரியங்களில் அநேகமானவை, துணை இல்லாமல் தனித்திருப்பவருக்கும் பொருந்தும். இருப்பினும், தனித்திருப் பவர்கள் பிரத்தியோகமான ஒரு நிலைவரத்தில் பிரத்தியேகமான சவால்களுடன் இருப்பதால், அவர்களுக்கென்று ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். இவை திருமணமானவர்களுக்கும் பிரயோஜன மானவையாயிருக்கும்.
ஒரு முக்கியமான அழைப்பு – தனித்திருப்பது தேவனிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ள (36 குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன) உன்னதான அழைப்பு. இதனை பவுல் மிகவும் உயர்வான மதிப்புக்குரியதாக வைத்திருந்தார்( 1 கொரி 7) தனித்திருப்பவர்கள், மனிதர் அனுபவிக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களில் ஒன்றான, பாலுறவில் நன்றாக ஈடுபடமுடியாது என்பது உண்மையானதாகும்.ரூத் டக்கர் என்பர், நற்செய்திப்பணி ஊழிய சுதந்திரம் தொடர்பான தனது புத்தகத்தில் திருமணமாகாத பெண் நற்செய்திப் பணியாளர்களின் பெரிதான ஊழியப் பணியைக் குறித்து தனியான அத்தியாயம் ஒன்றை எழுதியுள்ளார். இருப்பினும் இந்த திருமணமாகாத நற்செய்திப் பணிப்பாளர் முகங்கொடுத்த பிரதானமான அனுபவம் தனிமையும் சில வேளைகளில் மனச் சோர்வுமாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே, தேவன் எமது வாழ்க்கைக்குத் தந்துள்ள சிறந்தவற்றை இழக்கின்றார்கள் என நாம் கூறக்கூடுமா? பவுல் 1 கொரிந்தியர் 7 இல் கூறுபவற்றை நாம் கருத்திற் கொண்டால் அப்படியாக்க் கருதமுடியாது. அவர் இவ்விடத்திலே, சிறப்பாக தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு (வசனம் 26) திருமணமாகாதவர்களை, திருமணம் செய்ய வேண்டாமென அறிவுறுத்துகிறார். இயேசு தருவதாக வாக்களித்த நிறைவான வாழ்வு (யோவான் 10:10) தனித்திருப்பவர்களுக்கும் நிச்சயமாய் கிடைக்கும். உண்மையில் இயேசு திருமணமாகாத தனியானவராகவே இருந்ததுடன், உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவராயும் இருந்தார். எனவேதான் அவர் எமக்கு மகிழ்ச்சியைத் தரும்போது எமது மகிழ்ச்சி பூரணமானதாயிருக்கும் என்று சொன்னார். (யோவான். 15:11) அவர் இந்தக் காரியத்தை, உலகிலுள்ள எந்த மனிதனும் அனுபவத்திராத பெரிய உபத்திரமான உலகத்தின் பாவங்களின் தண்டனையை தான் ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாகச் சொன்னது சுவரசியமானதாகும். எனவே, உலகத்தின் பார்வையில் இழப்புள்ளது என கருதப்படும் வேளையிலும் கிறிஸ்தவர்கள் நிறைவானவர்களாய் இருக்கக்கூடும்.
பிரச்சினை என்னவெனில் நாம் வாழும் உலகம் பாலியலைக் கடவுளாகக் கணிப்பிடுகின்றது. இந்தக் கணிப்பீடு காரணமாக பாலியல் உறவுகளற்றவர்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளிலொன்றை இழந்தவர்கள் என்ற மனப்பாங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆராய்ச்சிகள் இம் மனப்பான்மை பிழையானது என உறுதிப்படுத்தியுள்ளன. பாலுறவைத் தவிர்த்துக் கொள்கிறவர்கள் சுகதேகியான நபர்கள் இருக்கலாம். பவுல், திருமணமாகாமல் தனிமையாயிருக்க மனிதரை அறிவுறுத்துவதற்கான காரணம்,இப்படியானவர்கள் குடும்பத்தைப் பாராமரிக்க வேண்டிய சுமையில்லாமல் தேவனுக்கு ஊழியம் செய்யக் கூடிய பிரத்தியோக நிலையில் இருப்பதேயாகும் (1 கொரி. 7:32-35)என்னுடைய வீட்டிலுள்ள படிப்பறையில் எனக்கு விருப்பமான துறைகளில் பிரசித்தி பெற்ற 28 கிறிஸ்தவ தலைவர்களின் படங்களை வைத்துள்ளேன். இவர்களில் 8 பேர் திருமணமாகாதோர் : ஏமி கார்மைக்கல், ஜோன் கிறிஸ்சோஸ்டம்,, ஹென்றியட்டா மியர்ஸ், சாது சுதந்தர்சிங், ஜோன் கிறிஸ்டோஸ்டம், சாது சுந்தர்சிங், ஜோன் சங், கோரி டென் பூம், சி.எஸ். லூயிஸ் தனது ஐம்பதாவது வயதின் பிற்பகுதியில் திருமணம் செய்து நான்கு வருடங்களில் தாரமிழந்தோர். இங்கு காணப்படும் திருமணமாகாதவருக்கும் திருமணமானவருக்கும் இடையேயான விகிதம் உலகத்தில் காணப்படும் விகிதத்திலும் அதிகமானதாகும். ரூத் டக்கர் தனது புத்தகத்தில், ஒரு ப்ப்டிஸ் நற்செய்திப் பணி அதிகாரி “சீனாவில் இரண்டு திருமணமான ஆண்களைவிட ஒரு பெண் அதிக பயனுள்ளவளாய் இருப்பாள்“ எனக் குறிப்பிட்டுள்ளதாக எழுதியுள்ளார்.
தீர்க்கப்படாத விருப்பங்கள்
திருமணமாகாதவர்களுக்கும் பாலியல் விருப்பங்கள் இருக்கும். இவை நிறைவேற மாட்டாது. அவர்கள் இவற்றைக் குறித்து என்ன செய்யக்கூடும்? எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்படியான சூழ்நிலைகளுக்குள்ளாகச் செல்வார்கள். நான் என்னுடைய வாழ்வின் இறுதி மூன்றிலொரு பகுதியில் உள்ளேன் என நம்புகின்றேன். நானும் எனது மனைவியும் எங்களில் இருவரில் ஒருவர் பரலோகத்திற்குப் போகும் நிலைமைக்கு எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். முப்பதாண்டு திருமண வாழ்க்கையின் பின்னர் இந்தக் கணம் உலகில் இருக்கப் போகின்றவர்களுக்கு மிகவும் கஷ்டமானதொரு அனுபவமாக இருக்கும் எனபது நிச்சியம். நாம் இருவரும் ஒரே நேரத்தில் மரிக்க விரும்புகின்றோம். ஆனால், அநேகமாக அப்படி நடக்க மாட்டாது. இணைந்து வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் தனித்து வாழும் வாழ்க்கைக்கு நாம் ஆயத்தமாக வேண்டும். இது மிகவும் கடினமானதென நாம் அறிவோம். ஆனாலும், தேவன் நம்மோடு நமது கடினமான அனுபவங்களோடுமிருந்தும் எமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தருவார் எனவும் நாம் அறிவோம். அன்புக்குரிய ஒருவரின் மரணத்தின் பிரிவின் மிகுதியிலும் கிறிஸ்தவ மகிழ்ச்சி தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.
கிறிஸ்தவனொருவன் உளவியல் ரீதியில் வளர்ச்சியடையாத ஒருவரைத் திருமணம் செய்து உளரீதியாக கடினமானதொரு திருமணவாழ்க்கைக்கூடாக மரணம் தம்மை பிரிக்கும் வரையில் வாழவேண்டிய சந்தர்ப்பங்களை நாம் சந்திக்கக்கூடும். இது கடினமானதாகும். எனினும் தேவன் தேவையான பலத்தைக் கொடுப்பார். திருமணமானவர்களில் சிலருக்கு உளரீதியான அல்லது சரீர ரீதியான பிரச்சினைகள் காரணமாக ஆரோக்கியமான பாலியல் உறவுகளில் ஈடுபட முடியாதுள்ளது. இப்படியான பிரச்சினைகள் தீரக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் சிலவேளைகளில் சில பிரச்சினைகள் குணமாக்கப்பட போவதில்லை.
தேவன் சிலரை இப்படியான அனுபவத்திற்குள் அனுமதிப்பது சாதாரண நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால், அவர் பிரச்சினைகளை விட பெரிதானவர். அத்துடன் இப்படியான அனுபவங்களை அனுபவிப்பவர்களுக்கு தனது பிள்ளைகளுக்கு கொடுக்கும் பரிபூரண வாழ்க்கையை அவர் கொடுக்கிறார்.
பரிசுத்த அவா
அப்படியானால் தனிமையாயிருப்பின் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக பாலியல் உறவின் அனுபவத்தின் நிறைவு பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான் இவர்களுக்கு வேதாகமத்தின் கட்டுப்பாடுகளில் ஒன்றான, “பரிசுத்த அவாவை“யோசனையாக முன்வைக்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள், தேவன் தமக்கென்று தருகின்ற ஆசீர்வாதங்களை சுவைத்தவர்கள். இருப்பினும், அவர்களுக்கு இப்பொழுது தாம் அனுபவிக்கும் காரியங்கள் முழுமையின் ஒரு முன்னுகர்வே என அறிவார்கள். எனவே அவர்கள் உலகத்தில் ஏமாற்றங்களை அனுவித்து நிறைவுக்காக ஏங்குவார்கள். பவுல் இதனை ரோமர் 8:18-25 இல் விபரிக்கின்றார். சங்கீதங்களில் விசுவாசிகள் தேவனுக்காக தவிப்பதையும் (சங். 42:1) தாகம் கொள்வதையும் (63:1) காண்கிறோம். இத்தாகமானது நாம் பரலோகம் செல்லும்வரை தீர்க்கப்பட மாட்டாத ஒன்றாகும். உன்னதப்பாட்டுக்கள், ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கிடையேயான அன்பு, திருமணத்தின் மூலமாக முழு நிறைவடைவதைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை இதே தத்துவத்தைப் பயன்படுத்துகின்றது.
தனிமையாய் இருப்பவர்களும் இவ்விடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களும் தங்களது அசாதாரணமான நிலைவரம் காரணமாக ஆழ்ந்த அழுத்தங்களை எதிர்கொள்வார்கள். பாலியல் ரீதியான சமுதாயத்தி டமிருந்தும் அழுத்தங்கள் உண்டு. அக்கறையுள்ள உறவினர்களிடமிந்தும், நண்பர்களிடமிருந்தும், இவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவர்வத்தினால் அழுத்தங்கள் உண்டு. இதன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக கூர்மையான கேள்விகளைக் கேட்ட வண்ணமாயிருப்பார்கள். தங்களிடத்தே காணப்படும் காதலுணர்வு, பாலுணர்வு காரணமாக அவர்களுக்கு அழுத்தங்கள் உண்டு. இவை இல்லையென மறுக்க முடியாது. ஆனால், அவர்கள் தங்களது ஆசைகளை பரிசுத்த அவாவாவக மாற்றக் கூடும். தேவன் எமக்கு முழுமையைத் திட்டமிட்டு வைத்துள்ளார். இது பரலோகத்திலேயே முழுமையை அடையும். இதற்கிடையில் அவர் எமக்குத் திருமணத்தை பாலிய வயதிலோ, பிந்திய வயதிலோ தரக்கூடும். அல்லது அவர் எம்மை தனிமைக்கு அழைக்கக் கூடும். இவர்கள் தேவன் தமக்குத் திட்டமிட்டுள்ள முழுமையாக்காக அவருடனிருந்து பரிசுத்தமாயிருப்பதன் மூலம் தேவன் தங்களுடைய வாழ்க்கைக்கா வைத்துள்ள அழகிய திட்டத்தை அழிக்காமல் காத்துக் கொள்ளலாம்.
(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)
இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும் மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்
|
IP Logged
|
|
http://paralogapathi.blogspot.com/ |
|
|
|
|
|
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலு..
25-04-2013 13:03:03
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
இஸ்லாம் கிறிஸ்துவ விவாதங்கள்
Topic :
கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (1)
Subject :Re:கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டாரா? (1)
அல்-ராசிக்கு எங்கள் பதில் என்ற பதிவை இப்போதுதான் வாசித்தேன். இந்தக் கட்டுரை எந்த அகப்பக்கத்தில் வெளியானது என்று குறிப்பிட்டால், அங்கே போய் மேல் விபரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். இஸ்லாமியர்களுக்கு ஒரு கேள்வி! இயேசுவானவர் சிலுவையில் அறையப்படும்போது ஆள் மாறாட்டம் செய்யப்பட்டாரா,,,,, அல்லது பிடி பட்ட உடனே ஆள் மாராட்டம் செய்யப்பட்டாரா? - சிலுவையில் அறையப்படும்போதுதான் ஆள் மாராட்டம் செய்யப்பட்டார் என்று சொல்வார்களானால், பிடி பட்டதில் இருந்து சிலுவையில் அறையப்படும் வரை அவர் பாடுகளை அனுபவித்திருக்கிறார் என்பதை அவர்கள் (இஸ்லாமியர்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்களால் சரியான விளக்கத்தைத் தர முடியவில்லை என்றால் (குர்ஆன், ஷதிஸ்களில் இருந்து) இவர்களுடைய முழு நம்பிக்கையையும் விட்டுக் கொடுக்க வேண்டி வரும். - அல்லாஷ் ஈஸாவை (இயேசுவை) எதிரிகளிடத்தில் கொஞ்சம் கூட ஒப்புக் கொடுக்கவில்லை. (ஈஸா பிடிபடும் போதே ஆள் மாராட்டம் செய்து விட்டார்)
- அல்லாஷ் ஈஸாவைக் எதிரிகளிடத்தில் இருந்து காப்பாற்றுவதில் கொஞ்சம் தவறி விட்டால். (சிலுவையில் அறையப்படும் போது ஆள் மாராட்டம் செய்து விட்டார்)
இந்த இரண்டு முடிவுகளில் இஸ்லாமியர்கள் எதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன். |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|
|
Subject :Re:உலகளாவிய நிலையில் விசுவ..
24-04-2013 20:46:20
|
|
|
| rawangjohnson |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,084
Location: ரவாங், மலேசியா |
|
|
|
|
Forum :
செய்திகள் - உலகம்
Topic :
உலகளாவிய நிலையில் விசுவாசிகள் ஒடுக்கப்படுகிற செய்திகள்
Subject :Re:உலகளாவிய நிலையில் விசுவாசிகள் ஒடுக்கப்படுகிற செய்திகள்: சீரியாவின் சிறப்பியல்புகள்
கலவரத்தின் மத்தியிலும் ஜனங்களைச் சந்தித்தோம் ‘சீரியாவின் தலைப்பட்டணமான டமாஸ்கஸ் நகரில் இருந்து நாங்கள் மேற்கொண்ட அந்தப் பயணம் கலைப்பூட்டும் நீண்ட பயணமாகதான் இருந்தது.’ பாஸ்டர் இமாட்டும் (புனைப் பெயர்) அவரின் துணைவியாரும் நகரை விட்டுப் புறப்படும் போது,துப்பாக்கி வேட்டும் குண்டு வெடிப்புகளும் காதைப் பிளந்தன. அவர்கள் தென் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கிராமத்திற்குப் பயணித்தனர். அக்கிராமத்தில் இப்போது இஸ்லாமிய அகதிகளே குவிந்திருக்கின்றனர். ‘எங்களுக்கு ஓட்டுநராக வந்தவர் கிராமத்திற்குள் வர மறுத்து விட்டார். ஆனால், தேவன் இன்னொரு ஓட்டுநரை ஆயத்தம் செய்து தந்தார். முழு பயணமும் அங்கு அமைதியாகதான் இருந்தது. எல்லா கலவரங்களையும் தேவன் அடக்கிப் போட்டதை நம்பவே முடியவில்லை.’ கலவரத்தில் இருந்து தப்பியோட்டம் இது ஒரு முக்கியமான பயணம். அவர்கள் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை விநியோகித்தனர். இந்த உதவிகள் ~!@# $%^& இயக்கத்தின் ஆதரவாளர்களுடைய தயாள கொடையால் வந்தவை. தங்கியிருந்த இரண்டு நாட்களில் 165 குடும்பங்களுக்கு பாஸ்டர் தம்பதியினர் அகதிகளுக்குப் போர்வைகளை வழங்கினர். ‘முழு நடவடிக்கைகளும் அற்புதங்களால் நிறைந்தவை. ஜனங்கள் மரியாதையோடும் நன்றியுணர்வோடும் உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வேதாகமங்களையும் வழங்கினோம். ஆனால், சில குடும்பங்கள் எங்களை மீண்டும் சந்திக்க வந்து, மேலும் அதிகமானவற்றைக் கேட்டனர். வைராக்கியமான இஸ்லாமியர்களின் இந்விதமான போக்கை நான் உண்மையிலேயே எதிர்ப்பார்க்கவில்லை,’ என்றார் பாஸ்டர் இமாட். நிலத்தைத் தயார் படுத்துதல் இன்று குழப்பமும் கொந்தளிப்பும் சீரியாவை ஆட்டிப் படைக்கிறது. சுமார் 1 மில்லியன் பேர் அகதிகளாகியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 2.5 மில்லியன் பேர் அகதிகளாக வாழ்கின்றனர். பல தொண்டூழிய மற்றும் சமூக சேவை இயக்கங்கள் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு வெளியேறி விட்டன. வைராக்கியத்தோடு உதவ முன்வருகிறவர்களோ, உட்புறப் பகுதிகளுக்குள் செல்வதற்குத் தடுமாறுகிறார்கள். ஆனால், தேவனுடைய அற்புதம் பொறுந்திய வழிநடத்துதலால், ~!@# $%^& இயக்கம் நிவாரண உதவிகளை அகதிகளிடத்தில் சேர்க்க முடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ~!@# $%^& இயக்கம் சீரியாவில் பெரும்பணிகளை மேற்கொள்ள தேவனால் அழைக்கப்பட்டது. ஆனால்,அந்நேரத்தில், இத்தகைய குழப்பங்கள் ஏற்படவில்லை. பன்னாட்டுக் காவல் பட்டியலில் கூட சீரிய இடம் பெறவில்லை. மாறாக,திருச்சபைகள் மறுமலர்ச்சிகளைக் கண்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே, பயணங்களும் கருத்தரங்குகள் மாத்திரம் நடத்தி வந்தோம். அது ~!@# $%^&க்கு ஒரு தொடர்புப் பாலத்தை ஏற்படுத்தித் தந்தது. வருங்கால உபத்திரவங்களை அறிந்தவராய், தேவன் எங்களுக்கு ஒரு பயணப் பாதையை அமைத்துத் தந்திருந்தார். இது உண்மையிலேயே அற்புதம்தான். வெளியேறாமல் இருப்பவர்களைத் திடப்படுத்துதல் ஆதரவாளங்களின் உதவியால், சீரிய சபைகளுக்கு உணவு, மருந்து, போர்வை, படுக்கை போன்ற நிவாரண உதவிகளை வழங்க முடிந்தது. அத்தோடு, அகதிகள் தங்குவதற்கான வசிப்பிடங்கள், வாடகை, அடிப்படைத் தேவை வசதிக்கான கட்டணம், வேதாகமம்,கிறிஸ்தவ நூல்கள், சீடத்துவப் பயிற்சிகள் போன்ற காரியங்களைக் கவனிக்க முடிந்தது. உங்கள் ஆதரவுக்காக ~!@# $%^& உண்மையிலேயே நன்றி கடன் பட்டுள்ளது. தேவனுடைய அற்புதங்களை உங்கள் ஆதரவுகள் செயல்பட வழி வகுத்துள்ளது. தேவனுடைய ராஜ்யம் ஒரே சரீரமாக கூடி வருவதற்கு உங்கள் பங்காளித்துவ செயல்பாடுகள் வழி வகுத்துள்ளன. தேவனுடைய ராஜ்யத்திற்காக தயாராக்கினோம் டமாஸ்கஸ் திரும்பிய பாஸ்டர் இமாட், தன் கடமையை நிறுத்தி விடவில்லை. ‘நாங்கள் ஒரு சிறு சபைதான். ஆனால், இப்போது,டமாஸ்கஸில் அகதிகளாகிப் போன 1,350 குடும்பங்களுக்கு உதவியுள்ளோம்,’ என்றார். ஒரு சபை மூலம், கிறிஸ்துவுக்காக சந்திக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மகத்தானது. ஆயினும், ~!@# $%^& ன் ஆதரவோடு,பாஸ்டர் இமாட்டின் சபை இன்னும் 1,500 குடும்பங்களுக்கும், இதர இஸ்லாமிய கிராமங்களுக்கும் உதவக் கூடும். சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினோம் சீரியாவின் நிலைமை அதிகதிகமாய் சீரழிந்து போகிறது. உங்கள் உதவி ஆயிரக் கணக்கான ஜனங்களைச் சென்றடைந்துள்ளது. ஆனால், இன்னும் தேவைப்படுவதோ அநேகம். சீரியாவுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள். வரும் மாதங்களில், தேவன் சீரியாவுக்காக திட்டமிட்டுள்ள காரியங்களை நிறைவேற்றும் பொருட்டு, ~!@# $%^& தன் துயர் துடைப்புப் பணிகளை விரிவு படுத்தும். ‘எங்கள் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, ஒரு கிராமவாசி தொடர்பு கொண்டார். குளிர் காலத்தைச் சமாளிக்க நீங்கள் வழங்கிய போர்வைக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருககிறோம். ஆனால், நீங்கள் வழங்கிய வேதாகமங்கள், அந்தப் போர்வையின் பயனை விட அதிகமானது.’ ‘இயேசுவானவரைப் பற்றி நான் இன்னும் அதிகமாக அவர்களிடம் அறிவிக்கப் போகிறேன்.’ 2013ன் ~!@# $%^& பட்டியலில் சீரியா 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. * பாதுகாப்பு காரணமாக பெயர்கள் புனைக்கப் பட்டுள்ளன. • இந்த இக்கட்டான நிலைமையில், சீரியாவில் வாழும் நமது சகோதர சகோதரிகளை ~!@# $%^& சந்தித்து அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழி காட்ட வேண்டும் என்று தேவனிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள். • கிறிஸ்தவ அகதிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆக்கப்பூர்வமான நிவாரண உதவிகளை வழங்கி வரும் ~!@# $%^& பணியாளர்களுக்கும், பங்காளிகளுக்கும் பாதுகாப்பும் மன வலிமையும் கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். • சீரியா விசுவாசிகளுக்குப் பெருகி வரும் இப்போதைய, வருங்காலத் தேவைகளைச் சந்திக்க ~!@# $%^& க்கு தேவன் ஞானத்தை அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். 11. சீரியா ஜனத்தொகை: 21.1 மில்லியன் (1.7 மில்லியன் பேர் கிறிஸ்தவர்கள்) உள் நாட்டுக் கலவரத்திற்கு முன்பு கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் கண்கானிக்கப் பட்டாலும், கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்நிலைமை துரிதமாக மாறி வருகிறது. மதம் மாறியவர்கள் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் பகைப்படுவது மட்டுமல்லாமல், அந்நிய தீவிரவாத ஆயுதக் கும்பலாலும், கூலிப்படைகளாலும் தாக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில், அரசாங்கத்தை ஆதரிப்பதற்காகவும் அல்லது நடு நிலை வகிப்பதற்காகவும் ஒடுக்கப்பட்டனர். இப்போதோ, அந்நிய இடதுசாரி கும்பல்களால் தெளிவான உள்நோக்கம் பிரயோகிக்கப்படுகிறது. பல கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டு, சரீரப் பிரகாரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லவும் பட்டுள்ளனர். ஆலயங்கள் தாக்கப்பட்டு இடித்துத் தள்ளப்படுகின்றன. 10 ஆயிரம் கிறிஸ்தவர்கள் உயிருக்கு அஞ்சி தப்பியோடியுள்ளனர். • வசிப்பிடத்தை விட்டுத் தப்பியோடிய கிறிஸ்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். • ~!@# $%^& வழங்கி வரும் அவசரகால நிவாரண உதவிகளுக்காகவும் மன நல ஆலோசனைகளுக்காவும் வேண்டிக் கொள்ளுங்கள். • சவால்கள் மத்தியிலும் சீரிய சபைகள் பிற மதத்தினரிடம் ஊழியம் செய்து வருவதற்காக தேவனைத் துதியுங்கள். மேல் விபரங்கள்: 1. சீரியா தேச வரலாறு: http://www.bbc.co.uk/news/world-middle-east-14703995 2. சீரியா உள்நாட்டுக் கலவரக் காலக் கோடு (விக்கிபீடியா): http://en.wikipedia.org/wiki/Timeline_of_the_Syrian_civil_war_(from_January_2013) 3. சீரியா தேசப் பின்னணி (விக்கிபீடியா): 4. http://topics.nytimes.com/top/news/international/countriesandterritories/syria/index.html 5. http://www.pbs.org/newshour/rundown/2012/08/syria-timeline.html |
IP Logged
|
|
www.bibatee.blogspot.com |
|
|
|
|